இறந்தவர்களை புதைக்கக்கூட வழியின்றி தவிக்கும் முதியோர் இல்லம் !
பூமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் இறப்பவர்களை புதைக்க வழி இன்றி தவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் பூமலைக்குண்டு ஊராட்சி பகுதியில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் இறப்பவர்களின் உடலை புதைக்க வழி இன்றி தவித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக இறந்த பெண் உடலை அடக்கம் செய்ய முடியாமல் முதியோர் இல்லத்தில் வைத்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பின்னர் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள மின் மயானத்தில் அடக்கம் செய்ய தேனி மாவட்ட ஆட்சித் தலைவர், பெரியகுளம் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டவர்களிடம் உரிய அனுமதி பெற்று இன்று இறந்த பெண் உடலை எரியூட்டப்பட்டது.
எனவே, இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர், தேனி தாசில்தார், சமூக நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்டவர் முதியோர் இல்லத்தில் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசு இடம் ஒதுக்க வேண்டுமென முதியோர் இல்ல நிர்வாகி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
— ஜெய்ஸ்ரீராம்.