கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் !
”தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தங்கு தடையின்றி விற்பனையாகும் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனையை தடுத்திட வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப கோவில்பட்டியில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இரவு நேர ரோந்து பணியை விரிவு படுத்த வேண்டும். உளவுத்துறையினர் பணியை அதிகரிக்க வேண்டும். செயல்படாமல் இருக்கும் புறக்காவல் நிலையங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் தரும் புகார் குறித்து கனிவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அந்த அமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பினர் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
— மணிபாரதி.