அங்குசம் சேனலில் இணைய

ஃபைவ் ஸ்டார் செந்தில் ரிலீஸ் பண்ணும் ‘அஸ்திரம்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப் படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார்.  படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்தவர், திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் பெற்றவர்.

'அஸ்திரம்'படத்தில் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் டி.எஸ்.எம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இதன் கதையை எழுதியுள்ளார் ஜெகன்.

படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை பைவ்-ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இவரது நிறுவனம் கடந்த சில மாதங்களில் தொடர்ந்து வெளியிட்ட ‘பார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘கருடன்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

‘அஸ்திரம்’ படத்தின் கதையும், படமாக உருவாகி இருக்கும் விதமும் பைவ் ஸ்டார் செந்திலை ரொம்பவே ஈர்த்து விட்டது. தற்போது படத்தை தனது பைவ்-ஸ்டார் நிறுவனம் மூலமாக இவர் வெளியிட இருப்பதால் முந்தைய படங்கள் போலவே ‘அஸ்திரமும்’ ரசிகர்களின் வரவேற்பை பெறும்  என்பது உறுதி.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஐரா, எட்டு தோட்டாக்கள், பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள ‘ரேஞ்சர்’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ‘இறுதிச்சுற்று’  ‘சூரரைப்போற்று’ படங்களில் துணை எடிட்டராக பணியாற்றிய பூபதி இப்படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகம் ஆகிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கலை வடிவமைப்பு: ராஜவேல், சண்டைப் பயிற்சி:  முகேஷ்.

பிப்ரவரி 21 இல் உலகமெங்கும் பைவ் ஸ்டார் நிறுவனம் பிரம்மாண்டமாக ‘அஸ்திரம்’ படத்தை வெளியிட உள்ளது.

மக்கள் தொடர்பு ; ஏ.ஜான்

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.