அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !
அன்பிற்கினிய அங்குசம் வாசகர்களுக்கு, இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
”மக்களுக்கான செய்தி” என்ற ஒற்றை முழக்கத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளாக உங்களது பேராதரவோடு அங்குசம் மாதமிருமுறை இதழாக இடைவெளியின்றி வெளிவந்து கொண்டிருக்கிறது.
பரபரப்பு செய்திகளுக்காகவோ, மற்றவர்களுக்கு முன்பாக செய்திகளை முந்தி தர வேண்டுமென்பதற்காகவோ அங்குசம் என்றும் போட்டி போட்டதேயில்லை. மற்றவர்கள் எழுதாமல் தவிர்க்கும் அல்லது ’தவிர்க்க’வியலாமல் பெட்டி செய்திகளாக ஒற்றை பாராவில் கடந்துபோகும் செய்திகளுக்குப் பின் உள்ள அரசியலை அதன் முழுப்பரிமாணத்தோடு வெளிக்கொணர்வதே அங்குசத்தின் இலக்கு.
அங்குசம் ஒருபோதும் நடுநிலை இதழ் என்பதாக அறிவித்துக் கொண்டதில்லை. அங்குசம் எப்போதும் ஒருபக்க சார்பான இதழ் தான். பெருவாரியான மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் விசயங்களை, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று, பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவே பதிவு செய்வதையே தனது முதன்மை நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறது, உங்கள் அங்குசம் இதழ் மற்றும் இணையம்.
அதிலும் குறிப்பாக, நிகழ்கால வாழ்க்கையே பெரும் போராட்டமாகவும் எதிர்காலம் குறித்த அச்சத்திலும் ஆழ்த்தப்பட்டிருக்கும் மக்களை குறிவைத்து நடத்தப்படும் மோசடிகள் பற்றிய அம்பலப்படுத்தல்களுக்கே முதன்மை முக்கியத்துவம் அளித்து வருகிறது, என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். நியோமேக்ஸ் மோசடி தொடங்கி தினுசு தினுசாக தினம் அரங்கேறும் ஆன்லைன் மோசடிகள் வரையில் பலவற்றை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.
ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வாக அதிகாரத்தில் இருந்தபோதிலும் அவரது மகன் வீட்டில் பணிப்பெண்ணாக கொடுஞ்சித்திரவதைகளை எதிர்கொண்ட ரேகாவின் நேர்காணலை அங்குசம் யூட்யூப் வீடியோவாக உலகிற்கு முதன்முதலாக வெளியிட்டது உங்களது அங்குசம் தான்.
ஆருத்ராவையும் அலேக்காக தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஏறத்தாழ 8000 கோடிகளுக்கும் மேல் மோசடியை அரங்கேற்றியதாக நம்பப்படும் நியோமேக்ஸ் மோசடி கதைகளை அதன் ஆதி அந்தம் முதலாக இன்று வரையில் எழுதி வருவதும் அங்குசம்தான்.
”பெட்டி வாங்கிவிட்டார்கள்”, “பெட்டிக்காக எழுதுகிறார்கள்” என்ற அவதூறுகள் தொடங்கி, அன்றாடம் வெளியாகும் வீடியோ பதிவுகளின் கீழே வந்து விழும் ஆபாச அர்ச்சனைகள் ஈராக, பல்வேறு வகைகளிலிருந்தும் வந்து சேரும் வெளிப்படையான மிரட்டல்களையும் எதிர்கொண்டு தான், நியோமேக்ஸ் மோசடி குறித்த பல்வேறு பிரத்யேக தகவல்களை இன்று வரையில் வழங்கி வருகிறது, உங்களது அங்குசம்.
இலஞ்ச ஒழிப்புத்துறையில் பதிவான 22 ஆயிரம் புகார்களில் வெறும் இரண்டு புகார்களின் மீதுதான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டது தொடங்கி, தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மாஃபியாக்கள் குறித்தும் புலனாய்வு கட்டுரைகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது உங்கள் அங்குசம்.
பொதுவில் வாசிப்பு பழக்கம் என்பதே சுருங்கிவிட்ட இந்த காலத்தில், வணிக ரீதியாக பெரும் வியாபார வலைபின்னலுடன் வெளிவரும் இதழ்களுக்கு மத்தியில், வரம்பிட்ட விளம்பரதாரர்களின் ஆதரவோடு மாதமிருமுறை இதழை கொண்டு வருவதே பெரும் சவாலான பணிதான். அங்குசம் அச்சு இதழ் வெளியான சில தினங்களிலேயே, அதன் டிஜிட்டல் வடிவம் அங்குசம் இணையத்தில் அனைவரும் இலவசமாக தரவிறக்கம் செய்தும் படிக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. வியாபார நோக்கம் அல்ல; பலருக்கும் பயனுள்ள வகையில் செய்தி பரவலாக சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் நாம் முன்னெடுக்கும் முயற்சிகள் இவை.
இதற்கு மத்தியில்தான், கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு இதழ்கூட விடுபடாமல் அங்குசம் இதழ் தொடர்ந்து வெளியாகி வருகிறது. நாளொன்றுக்கு இலட்சத்திற்கு குறைவில்லாத பார்வையாளர்களை கொண்ட, இணையமாக அங்குசம் இயங்கி வருகிறது.
வாசகர்களே அங்குசம் இதழின் ஆதாரம். உங்களது ஊக்கமான ஒத்துழைப்பை அங்குசம் உரிமையோடு கோருகிறது. அங்குசம் இணையம் மற்றும் அங்குசம் அச்சு இதழில், மிகக் குறைந்த சேவை கட்டணத்தில் விளம்பரங்களை வழங்கி ஆதரவு அளியுங்கள்.
அதைவிட, முக்கியமாக தொடர்ந்து இதழ் வெளியாவதை உத்தரவாதப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தை சந்தா சேர்ப்பு இயக்கமாக அறிவித்திருக்கிறோம்.
தனி இதழ் ஒன்று ரூ.30/-க்கு வெளியாகும், அங்குசம் இதழின் ஆண்டு (24 இதழ்கள்) சந்தா தொகை ரூ.720/-. சந்தா சேர்ப்பியக்க சலுகையாக, பரவலான சந்தாதாரர்களை உருவாக்க வேண்டுமென்ற நோக்கில் சந்தா தொகையை ரூ.500/- என்பதாக தீர்மானித்திருக்கிறோம்.
ஜனவரி 10 தொடங்கி ஜனவரி – 31 வரையிலான இரண்டு வார காலத்தில், புதிய சந்தாதாரராக இணையும் அனைவருக்கும் அங்குசம் இதழின் சார்பில் வெளியான அழகிய மினி காலண்டர் ஒன்றையும் இலவசமாக அனுப்பி வைக்கிறோம்.
2025 / Angusam Calendar / English / தமிழ் மாத காலண்டர்
உங்கள் சந்தா தொகையை கீழ் கண்ட ஜீபோ எண்ணில் பணம் செலுத்திவிட்டு உங்கள் முழுமையான முகவரியை 9488842025 என்கிற எண்ணின் வாட்ச்ஆப் எண்ணிற்கு அனுப்புங்கள்…
அங்குசம் வழங்கும் இந்த சலுகையும் இலவசமும் வணிக நோக்கிலானவை அல்ல என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அங்குசம் வழங்கும் அன்பின் வெளிப்பாடுகள் இவை.
அங்குசம் இதழின் வாசகர்களாகிய உங்களின் பேரன்பை, நீங்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை நாங்களும் நன்கறிந்தே இருக்கிறோம். அங்குசம் இதழோடும் அங்குசம் இணையத்தோடும், அங்குசம் யூட்யூப் மற்றும் சமூக வலைதள பக்கங்கங்களோடும் எப்போதும் இணைந்திருங்கள்.
இப்போது போல் தொடர்ந்து தங்களது நல் ஆதரவை வழங்குங்கள்! அங்குசம் இதழின் சந்தாதாரராக இணைந்து, அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள்!
அன்புடன்,
J.Thaveethuraj
( ஜெ.டி.ஆர் )
Angusam e-Paper படிக்க
[…] அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொட… […]