நல்ல தருணத்தில் வருகிறது ‘தருணம்’ திரைப்படம்
ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், ‘தேஜாவு’ படத்தின் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஸ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள ‘தருணம்’ படம், பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக ஜனவரி 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசியவர்கள்….
தயாரிப்பாளர் புகழ்
“எங்கள் படத்தை வாழ்த்த இங்கு வந்துள்ள பிரபலங்களுக்கு நன்றி. ஒரு நல்ல படம் தந்துள்ளோம். பத்திரிகை யாளர்களாகிய நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் முழு ஆதரவைத் தர வேண்டும்”.
எடிட்டர் அருள் E சித்தார்த்
“தேஜாவு தான் என் முதல்ப்படம். அந்தப் படத்தில் தான் அரவிந்த் அறிமுகம். இந்தப்படத்துக்கும் நீங்கள் தான் எடிட்டர் என்றார். தேஜாவு படத்தில் பாட்டு, ஃபைட் இல்லை ஆனால் இந்தப்படத்தில் அதற்கும் சேர்த்து, எல்லாம் வைத்துள்ளார். தேஜாவு படம் போல, இந்தப்படத்திலும் இடைவேளையிலிருந்து வேறு மாதிரி இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்”.
டான்ஸ் மாஸ்டர் பாபி
“எல்லோரும் நல்ல தருணத்துக்காகத்தான் உழைக்கிறோம். இந்தப் படமான தருணத்துக்கும் அது அமைய வேண்டும். தயாரிப்பாளர் இப்படத்திற்கு முழு ஆதரவாக இருந்தார். அவர்களுக்கு இது நல்ல வெற்றிப்படமாக அமைய வேண்டும். அரவிந்த் ப்ரோ குறுகிய காலத்தில் பெரும் உழைப்பைத் தந்துள்ளார்”.
இசையமைப்பாளர் அஸ்வின்
“இப்படத்திற்கு நான் பின்னணி இசை அமைத்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பைத் தந்ததற்கு இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. நிறைய புதிய முயற்சிகள் செய்துள்ளோம். படம் மிக நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இந்தப்படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி”.
நடிகை கீதா கைலாசம்
“நான் வழக்கமாகச் செய்யும் அம்மா பாத்திரத்திலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்தக்கதையை அரவிந்த் சொன்னபோதே, எனக்குப் பிடித்திருந்தது. ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன், அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது மகிழ்ச்சியும் நன்றியும்”.
பாடலாசிரியர் மதன் கார்கி
“இந்தப்படத்தின் கதையை அரவிந்த் சொன்னபோதே எனக்குப் பிடித்திருந்தது. ஒரு அழகான ரொமான்ஸ் கதையில், த்ரில்லரை நுழைத்து, மிக அழகாகத் திரைக்கதை அமைத்துள்ளார். தர்புகா சிவாவுடன் நிறையப் படம் செய்துள்ளேன். அவரது இசை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் இரண்டு அழகான பாடல்கள் எழுதியுள்ளேன். ஒவ்வொன்றிற்கும் இரண்டு வேலை இருந்தால் எப்படி இருக்கும் எனும் மையத்தில் ஒரு அழகான பாடல் எழுதியுள்ளேன். இந்தப் படம் நல்ல த்ரில்லராக வந்துள்ளது. படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்”.
ஸ்ம்ருதி வெங்கட் “டைரக்டர் அரவிந்த் இந்தக்கதை சொன்னார் மிகவும் பிடித்திருந்தது. .அனைத்து கலைஞர்களும் கடின உழைப்பைத் தந்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள்”.
தயாரிப்பாளர் தனஞ்செயன்
“இந்த தைப் பொங்கல் அனைவருக்கும் நல்லதாக அமைய வேண்டும். தருணம் படத்திற்கும் நல்லதாக அமைய வேண்டும். புதிய தயாரிப்பாளர் புகழுக்கு வாழ்த்துகள். முதல் படத்திலேயே, ஒரு கார்பரேட் கம்பெனி போல் சினிமாவைத் திட்டமிட்டு உருவாக்கியது ஆச்சரியமாக இருந்தது. இந்தப்படத்தில் புகழ் மற்றும் ஈடன் இருவரின் இன்வால்வ்மெண்ட் மிகப்பெரியது. டைரக்டர் அரவிந்த் எனக்கு நெருங்கிய நண்பர். அனைவருக்கும் நல்ல தருணம் அமையட்டும் “.
ஹீரோ கிஷன் தாஸ்
“பொங்கலுக்கு வெளியாகும் பல படங்களில் எங்கள் படமும் ஒன்று. உங்கள் முழு ஆதரவைத் தந்து, நீங்கள் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தப்படத்திற்காக அரவிந்த் என்னை அழைத்தார். தேஜாவு இயக்குநர் என்ற உடனே, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் மீது முழு நம்பிக்கை வைத்தார். அரவிந்த். புகழ் & ஈடன் இருவருக்கும் இது முதல் திரைப்படம். இப்போதுள்ள திரைத் துறையில் முதல் படம் செய்வது எத்தனை கடினம் என்பது தெரியும். அதைத் தாண்டி மிகச் சிறப்பாக இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்கள். இப்படம் அவர்களுக்காகப் பெரிய வெற்றி பெறும். என்னை நம்பி இந்தப்படம் தந்த அரவிந்துக்கு நன்றி. என் முதல் படத்திற்கு ஆதரவு தந்தது பத்திரிகையாளர்கள் தான். இந்தப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன்
“நான் பத்திரிகையாளராக இருந்து தான் சினிமாவுக்குள் வந்துள்ளேன். நீங்கள் எனக்குத் தந்து வரும் ஆதரவு மிகப்பெரியது. தருணம் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. புகழ் & ஈடன் இருவருக்கும் இது முதல் திரைப்படம். என்னை நம்பி இந்தப்படத்தை தயாரித்ததற்கு நன்றி. முதல் படத்தில் எல்லோரும் புது முகம் என்றால் தயங்குவார்கள், ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் தான் இயக்குநர் நீங்கள் என்ன சொன்னாலும் சரிதான், என்று சொல்லி இந்த படத்தைத் தயாரித்தார்கள் அவர்களுக்கு நன்றி… நன்றி… நன்றி.ஒரு தரமான படைப்பு வரும் போது நீங்கள் கைவிட்டதில்லை, அந்த நம்பிக்கையில் தான் படத்தை, பொங்கலுக்குக் கொண்டு வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
தொழில் நுட்பக் கலைஞர்கள்:
எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
படத்தொகுப்பு – அருள் E சித்தார்த்
கலை இயக்குனர் – வர்ணாலயா ஜெகதீசன்
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
தயாரிப்பாளர் – புகழ் & ஈடன் (ZHEN STUDIOS )
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)
— மதுரை மாறன்.