சீமானின் நாக்கை அறுக்க வேண்டும் பெரியார் உணர்வாளா்கள் ஆவேசம் !
சீமானின் உருவ பொம்மை எரித்தும், சீமான் படத்தின் மீது காலணி வைத்து அடித்து கண்டன கோஷங்கள் எழுப்பிய பெரியாரிய கூட்டமைப்பு உணர்வாளர்களால் மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே பரபரப்பு .
பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக 30.01.2025 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக (அனுமதி மறுப்பு) திடீரென ஒன்று கூடி சீமானின் உருவப்படத் மீது காலணிகள் வைத்து தாக்கியும், சீமானின் உருவ பொம்மையை எரிக்க தொடங்கியதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சீமானுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பிய போது காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.
மேலும் சீமானுடைய உருவப்படம் (திரைப்படங்களில் வரக்கூடிய தாதாக்கள் அணிவது போல நகைகள் அணிந்தவாறு இருக்கக்கூடிய படத்தின் மீது காலணிகளை வைத்து அடித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியும் அந்த படத்தை சுக்கு நூறாக கிழித்து எரிந்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திருவள்ளுவர் சிலை முன்பு கண்டன கோஷங்கள் எழுப்பிய நிலையில் சிறிது நேரம் பரபரப்புக்கு பிறகு அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.