லாட்ஜில் ரகசிய கேமார! வீடியோவை காட்டி பணம் பறித்த போலீஸ் ! இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!
இளைஞர் ஒருவர் அந்தரங்கமாக இருந்ததை வீடியோ எடுத்து பணம் பறித்ததால் தற்கொலை லாட்ஜ் நிர்வாகம். போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிலியனூர் பகுதியைச் சேர்த முனியப்பன் மகன் “புகழேந்தி (28)” இவர், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு தனது காதலியோடு “தருமபுரியில் உள்ள “MG என்ற லாட்ஜில்” அறை எடுத்து தங்கியுள்ளார்.
அப்போது அறையில் இருந்த ரகசிய கேமராவில் அவர்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவாகி உள்ளது . அந்த பலான படங்களை எடுத்த விடுதியின் நிர்வாகிகள் “புகழேந்தியை ” அவ்வபோது மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
இதனை தடுக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி E1 காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகழேந்தி ‘ புகாரைப் பெற்றுக் கொண்ட தற்போது பாப்பாரப்பட்டியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் தர்மபுரி E1 காவலர்கள் விஜய் சங்கர் மணிவண்ணன் ஆகியோர் “எம்ஜி லாட்ஜ்” நிர்வாகிகளிடமிருந்த புகழேந்தி’யின் அந்தரங்க வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொண்டு “புகார் கொடுத்த புகழேந்திடமே ” போலீசார்கள் மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் சேலத்திற்கு மாறுதாலகி சென்ற எஸ்ஐ, விஜயக்குமார் கடந்த 2-ந் தேதி மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால் வீட்டிலிருந்த நகைகளை பாப்பாரப்பட்டி முத்தூட் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 60 ஆயிரம் பணத்தை எஸ்ஐ விஜயக்குமார் அனுப்பி வைத்த நபரிடம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் , நகையை கேட்டு புகழேந்தி குடும்பத்தினர் தகராறு செய்தபோது தன்னை மிரட்டி பாப்பாரப்பட்டியில் இருந்த “காவல் உதவி ஆய்வாளர்” “எம்ஜி லாட்ஜ்” நிர்வாகிகள் கூட்டாக சேர்ந்து தொடர்ந்து பணம் பறித்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார்.
இந்நிலையில், விரக்தியில் இருந்த புகழேந்தி இனியும் பணம் கொடுக்க வழியில்லாததால் கடந்த 3-ந்தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது ரைஸ் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், பணம் பறித்த “பாப்பாரப்பட்டியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர்” மற்றும் “எம்ஜி லாட்ஜ் ” நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று முன்தினம் பென்னாகரம் அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு சம்பவம் பரபரப்பை ஏற்பதியது இந்த வழக்கு சம்பந்தமாக நேற்று மாலை சவுரி செட்டிப்பட்டியை சேர்ந்த சதீஷ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பென்னாகரம் காவல்துறை கண்காணிப்பாளர் மகாலட்சுமியிடம் கேட்டபோது,
சம்மந்தப்பட்ட லாட்ஜில் ஆய்வு செய்துள்ளோம் . புகாரின் அடிப்படையில் தூரிதமாக மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
குற்றச்சாட்டுக்குள்ளான MG லாட்ஜ் பணியாளரிடம் கேட்டபோது
2021 ஆண்டு சம்பவம் நடந்ததாக கூறியுள்ளனர் அந்த ஆண்டு எங்களுடைய புக்கிங் ரெக்கராடில் உதயகுமார் பெயரில் ரூம் பதிவாகவில்லை. தவறாக கூட பெயரை குறிப்பிட்டு இருக்கலாம், மேலும் போலீசார்கள் வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளனர் என்றார்.
புகழேந்தி உறவினர்
வருமானம் பார்க்க இப்படி அவசர கதியில் வரும் ஜோடிகளுக்கு ரெக்கார்ட்டில் பதிவு செய்யாமல் குறைந்த பணம் பெற்றுக்கொண்டு அனுமதிக்கிறார்கள் , அதை ரகசியமாக கேமராவில் படமெடுத்தது சட்டத்தை மீறியது தனிமனித உரிமைகள் மீறல் செயல் என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
அதே வகையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, லாட்ஜ் மீது போலீசில் புகார் அளித்தவரிடமே பலான படம் காட்டி பணம் பறித்து வந்த போலீசாரால் இளைஞர் உயீரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தர்மபுரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்பதியுள்ளது.
— மணிகண்டன்.