திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில்  கணித ஒலிம்பியாட் 2025 விழா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் கணிதவியல் துறை சார்பாக  மாநில அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையேயான கணித ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 105 பேர் இப்போட்டியில் பங்கேற்றனர்.

கல்லூரியின் ஜூபிலி அரங்கில் நடைபெற்ற தொடக்கவிழாவில் கணிதவியல் துறைத் தலைவரும் இணைப்பேராசிரியருமான முனைவர் தியாகராஜன் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் அருள்முனைவர் சி. மரியதாஸ், சே.ச. தலைமை வகித்து  கணித ஒலிம்பியாட் 2025 விழாவைத் தொடங்கி வைத்தார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

கணிதவியல் மற்றத் தலைவர் முனைவர் கீதா சிவராமன் மன்றத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். தொடக்கவிழாவின் நிறைவில் கணிதவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் உமா மகேஸ்வரி நன்றியுரையாற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற கணிதவியல் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்தல், வினாடி வினாப் போட்டிகள், கணிதத் தொடர்பான மாடலிங், டாட்டூ, ஸ்கெட்சிங் உள்ளிட்ட பல போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் மன்றத்தின் இணைச்செயலர் திருமிகு அனிதா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி இணை முதல்வர் முனைவர் பா.ராஜேந்திரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி நிறைவுயாற்றினார். ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் காவேரி பெண்கள் கல்லூரி ஒட்டுமொத்த சாமிபியன்ஷிப் கோப்பையை வென்றது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரண்டாவது இடத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரி பெற்றது. விழா, மன்றத் தலைவர் முனைவர் கீதா சிவராமன், அவர்களின் நன்றியுரையாற்றினார். அருள்தந்தையர்கள், பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இளநிலை மற்றும் முதுநிலை  மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

 

—   அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.