திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையின் தொல்லியல் சார்ந்த ”கண்காட்சி மற்றும் கருத்தரங்கு”
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாக தொல்லியல் சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.
முன்னோர்களின் வரலாறையும், அறிவியலையும் தெரிந்து கொள்வதற்கு சான்றாக அமைந்த தொல்லியல் கண்காட்சி மாணவர்களிடையே தொல்லியல் சார்ந்த ஆர்வத்தை விதைக்கும் நிகழ்வாக அமைந்தது.
இந்தக் கண்காட்சிக் கருத்தரங்கில் புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்க காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் என பல்வேறு கட்டங்களில் தமிழகத்தில் தொல்லியல் வரலாற்றுச் சார்ந்த கள ஆய்வுகளில் பெறப்பட்ட தடயங்கள் மற்றும் எச்சங்கள் மாணவர்களுக்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக புதிய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் , பெருங்கற்காலம் என்று சொல்லப்படக்கூடிய காலகட்டத்தில் மக்களால் பயன்படுத்தப்பட்ட புழங்கு பொருட்கள், சங்ககால மக்கள் பயன்படுத்த வட்டச் சில்லுகள் , தக்களி என்று சொல்லக்கூடிய நெசவு நெய்ய பயன்படுத்தப்பட்ட கருவி , போர் கருவிகளாக கட்டாரி , வளரி , ஓலைச்சுவடி போன்ற எண்ணற்ற தமிழர்களுடைய எச்சங்களை எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டன .
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் கல ஆய்வுகளில் சேகரிக்கப்பட்ட நடுகள், கல்வெட்டுகள் சார்ந்த நிகழ்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன. இது முன்னோர்களின் வரலாறையும், அறிவியலையும் தெரிந்து கொள்வதற்கு சான்றாக அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
கல்லூரி முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ், சே.ச. தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சிக் கருத்தரங்கில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி துறைப் பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் ஆ.பிரபு கருத்துரையாளராக பங்கேற்று கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கல்லூரி செயலர் அருள்முனைவர் கு.அமல், சே.ச. துறைத் தலைவர் முனைவர் பெஸ்கி, கருத்தரங்கச் செயலர் முனைவர் மரிய தனபால் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்தக் கண்காட்சியை கண்டு பயன்பெற்றனர்.
— அங்குசம் செய்திப்பிரிவு.