‘கழிப்பறை’ சொல்லும் சேதி!
Vanshika Makkar Films பேனரில் ப்ரீத்தி அமித் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கழிப்பறை’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.
இவ்விழாவினில் பேசியோர்…
தயாரிப்பாளர் ப்ரீத்தி அமித் குமார்
“ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தர வேண்டுகிறேன்”.
இசையமைப்பாளர் தீனா
“இப்படம் ஜெயிக்க வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
பாடகர் உன்னி கிருஷ்ணன்
“இது மிக முக்கியமான தருணம். அமித் சார் ஃபேமிலி எனக்கு மிக நெருக்கம். அவர்களின் பட விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அமித்தின் மகள் வன்ஷிகாவின் குரல் மிக அருமையாக இருந்தது. அவரிடம் சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை இருந்தது. அவருக்காகத் தான் இந்தப்படத்தில் நான் பாடினேன். இந்த டீம் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். படம் மிகப்பெரிய வெற்றி பெறும் “.
பாடகி வன்ஷிகா
‘என் குருவிற்கு என் முதல் நன்றி. தயாரிப்பாளர்களான என் அம்மா அப்பாவுக்கும் எனக்குப் பாட வாய்ப்பளித்த ஸ்ரீகாந்த் சார், டைரக்டர் கிஜு சாருக்கும் என் நன்றி. எனக்கு உங்கள் வாழ்த்தைத் தாருங்கள்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்தன்
“இது எங்களுக்கு மிக முக்கியமான படம். மிக அருமையாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
இயக்குநர் கிஜு
“இந்தக் கதையை அமித் சாரிடம் சொன்ன போது, பட்ஜெட் சின்னது தான். படம் ஆரம்பித்ததும் பட்ஜெட் தாண்டியது. ஆனாலும் சரி பார்த்துக் கொள்ளலாம் என ஊக்கம் தந்தார். அதற்கு என் நன்றி.
வன்ஷிகா என்ன மாதிரி பாடல் என்றாலும், மிக திறமையாகப் பாடி அசத்திவிடுவார். தமிழ் சினிமாவில் பெரிய உயரம் தொடுவார். என் படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி. கழிப்பறை ஒரு நல்ல படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது, உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
— மதுரை மாறன்.