இந்திய சினிமாவில் மிகவும் காஸ்ட்லியான ‘டாக்ஸிக்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

யாஷ் நடித்து முடித்திருக்கும் ‘டாக்ஸிக்- ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ் ‘ என்ற சினிமா ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட  மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இயக்குநர் கீது மோகன் தாஸ் எழுதி இயக்கியுள்ளார்.

Sri Kumaran Mini HAll Trichy

படத்தைப் பற்றி இயக்குநர் கீது என்ன சொல்றாருன்னா…..,  “இந்தப் படத்திற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வை- இந்தியாவிலும், உலக அளவிலான பார்வையாளர்களுடனும் உண்மையாகவே எதிரொலிக்கும் ஒரு கதையை உருவாக்குவதாகும். கதையின் நுணுக்கங்களை கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பிரத்யேகமாக படமாக்க நாங்கள் உழைத்துள்ளோம். இது பல்வேறு மொழியியல் மற்றும் கலாச்சார பின்னணியில் உள்ள பார்வையாளர்களுக்கு  நிஜமான அனுபவத்தை  த் தரும் . கலைப் பார்வை மற்றும் வணிக ரீதியிலான கதை சொல்லலின் துல்லியத்தை ஆராய்கிறது.  நிலவியல் எல்லைகள்,மொழிகள், கலாச்சார வரம்புகளையும் எல்லாம் கடந்து உலகெங்கிலும் உள்ள இதயங்களுடனும்,  மனங்களுடனும் இணைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பயணம்” என்கிறார்.

கே.வி.என் புரொடக்சன் &  யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ்   சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா இணைந்து தயாரித்திருக்கும் ‘டாக்ஸிக்’-ல்  ஹாலிவுட் படங்களான ‘ஜான் விக்’,  ‘ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ்’  ஸ்டண்ட் டைரக்டர்   ஜே. ஜே. பெர்ரியின் அதிரடி ஸ்டண்ட் சீக்வென்ஸ், ‘டூன்-2’  விஷுவல் எஃபெக்ட்ஸிற்காக பாஃப்டா திரைப்பட விருதை வென்ற        ‘டி. என். இ .ஜி’ யின் விசுவல் எஃபெக்ட்ஸ்   குழுவினர் படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

கடந்த மாதம் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் பிறந்த நாளன்று ‘டாக்ஸிக்’ உலகத்தை பற்றிய  டீசர் வெளியானதுகுறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாராகி இப்ப நிறைவு க்கட்டத்தை எட்டியுள்ளது. விலை உயர்ந்த இந்திய சினிமா தயாரிப்புகளில் ஒன்றாகும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா பேசும் போது  ” டாக்ஸிக் படத்திற்கான எங்களுடைய குறிக்கோள் மிக தெளிவாக இருந்தது. இந்தியாவிலும், உலக அளவிலும் எதிரொலிக்கும் ஒரு படம்.  தொடக்கத்தில் இருந்து இந்தக் கதையிலும், அதன் ஆற்றலிலும் ஏற்பட்ட ஆழமான நம்பிக்கையால் நாங்கள் உந்தப்பட்டோம். இது அசைக்க முடியாத நம்பிக்கை. ‘டாக்ஸிக்’ உலக அரங்கில் இந்திய சினிமாவின் திறமையையும் வெளிச்சம் போட்டு காட்டும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இந்த சவாலை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்”. என்கிறார்.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.