திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவா்கள் நடத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை மற்றும் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவர்களால் திருச்சி அளுந்தூர் பள்ளப்பட்டி கிராமத்தில் சிறப்பு சுகாதாரத் தூய்மை விழிப்புணர்வு. கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் மரிய தாஸ் சே ச அவர்களின் அறிவுரை படியும் விரிவாக்கத்துறை செப்பர்டு இயக்குனர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச அவர்களின் ஆலோசனைப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ஆனி ரோஸ் அவர்கள் தனது சிறப்புரையில் சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் தூய்மை கடைப்பிடிப்பு பற்றி கூறினார்.
செப்பர்டு இளநிலை ஒருங்கிணைப்பாளர் திருமதி யசோதை அவர்கள் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் அவரவர் வீட்டில் உள்ள குப்பைகளை சரிவர பராமரித்தாலே நமது கிராமம் முழுவதும் தூய்மையாக இருக்கும் என தனது கருத்துரையில் எடுத்துக்கூறினார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிகழ்ச்சியல் வந்தவர்களை செல்வன் ரூபின் ஜோயல் வரவேற்றார் முடிவில் செல்வன் ரொமரியோ நன்றி கூறினார். செல்வன் ரிவால்டோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர்கள் நிகழ்ச்சியை எற்பாடு செய்தார்கள்; இந்நிகழ்ச்சியில் 102 பேர் கலந்து கொண்டார்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து போடுவதற்கு வசதியாக கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் குப்பை தொட்டி வழங்கப்பட்டது.