இப்படி அடுத்தவர்கள் கஷ்டத்திலும் பணம் பார்க்கும் கும்பலிடம் கவனமாக இருங்க..
அதிர்ச்சியா இருக்கு..
“கார்டு மேல நம்பர் சொல்லு.. ” பான்பராக் வாயனுங்க டிஜிட்டல் மோசடிக் கும்பல் இரத்த தானத்தையும் விட்டு வைக்கல..
என் பக்கத்தில் இரத்தம் தேவை கோரிக்கைகள் அடிக்கடி வெளியாகும்.. நானும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை இரத்தம் தானம் செய்வேன்.
உயிருக்குப் போராடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இரத்த தானம் கோரிக்கைகளை என் பக்கத்தில் வெளியிடுகிறேன்.

நண்பர்களும் அதே எண்ணத்தில் தான் இரத்தம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் பதிவு போட்ட ஒரு மணி நேரத்தில் இரத்தம் கிடைத்துவிடும்..
ஆனால் நாம் இப்படி உதவி செய்யும் நோக்கில் போடும் பதிவைக் கூட வட இந்திய டிஜிட்டல் மோசடி கும்பல் தங்களின் திருட்டுத் தனத்திற்கு பயன்படுத்துகிறது என்பதை இன்று அறிந்துக் கொண்டேன்.
நேற்று போட்ட இரத்த தானம் பதிவிலிருந்த எண்ணுக்கு போனைப் போட்டு “மருத்துவமனை வாசலில் நிக்கோம்.. காருக்கு பணம் கொடுக்கணும்.. எங்களுக்கும் பணம் கொடுங்க.. “னு ஸ்கேனர் அனுப்பி பணம் கேட்டிருக்கிறான் ஒருவன்.

நண்பர் நல்லவேளை எச்சரிக்கையாக இருந்ததால் பணம் அனுப்பவில்லை.
இப்படி அடுத்தவர்கள் கஷ்டத்திலும் பணம் பார்க்கும் கும்பலிடம் கவனமாக இருங்க..
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இரத்தம் தானம் செய்வதே உதவி செய்யதான்.. அதைக் கொடுக்க வரும் என் நண்பர்கள் எவரும் பணம் கேட்க மாட்டார்கள்..
ஆகவே இதுபோன்ற ‘டிஜிட்டல் இண்டியா’ மோசடி கும்பலிடம் கவனமாக இருங்கள்..
— கார்டூனிஸ்ட் பாலா.