வாலிபா் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி பணம் பறித்த ரவுடிகள்!
திருவெறும்பூர் அருகே வாலிபரை கத்தி கழுத்தில் வைத்து மிரட்டி பணம் பறித்த 4 ரவுடிகளை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோண்ராஜ் இவரது மகன் விவேக் (34) இவர் நேற்று கூத்தைப் பார் செவந்தான் குளம் கரையில் நடந்து சென்று கொண்டிருந்ததாகவும் அப்பொழுது அந்த வழியாக வந்த மேல குமரேசபுரம் சாமியார் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் பிரபல ரவுடியான முயல் கார்த்தி (32) அவனது நண்பர்கள் ஆன திருவெறும்பூர் காந்திநகரை சேர்ந்த போலீஸ்குமார் மகன் ரவுடி சுரேஷ் குமார் ( 32 ), காட்டூர்அன்னதாசன் தெருவை சேர்ந்த கணேசன் மகன் ரவுடி முத்துப்பாண்டி ( 28 ), வடக்கு காட்டூர் அண்ணாநகர் ராஜவீதியை சேர்ந்த சார்லஸ் மகன் ரவுடி சந்தோஷ் சாலமன் ராஜ் (25 ) ஆகிய நான்கு பேரும் விவேகிடம் இருந்து நீ யார் எந்த ஊர் இங்கு எதற்கு வந்தாய் எங்கு செல்கிறாய் என கேள்வி மேல் கேள்வி கேட்டதோடு நீ வைத்திருக்கும் பணத்தை எடு என முயல் கார்த்தி மிரட்டியுள்ளனர்.
மேலும் தான் ஒரு ரவுடி என்றும் அதேபோல் தனது நண்பர்களான இவர்களும் ரவுடி தான் என்றும் கூறியதோடு பணம் கேட்டு மிரட்டியதற்கு விவேக் தன்னிடம் பணம் இல்லை தர முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முயல் கார்த்தி, சுரேஷ்குமார் ஆகிய இருவரும் கத்தியை எடுத்து விவேக்கை குத்துவது போல் வந்துள்ளனர் முத்துப்பாண்டி விவேக்கின் கழுத்தில் வைத்துள்ளான் அப்பொழுது சந்தோஷ் சாலமன் ராஜ் விவேக் பாக்கெட்டில் வைத்திருந்த 2000 பணத்தை பரித்துள்ளான்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கேட்க வந்த பொழுது அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி சளம்பி உள்ளனர். இதனால் பொதுமக்கள் பயந்து ஒதுங்கி சென்றுள்ளனர்.
இதுகுறித்து விவேக் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.