முளைத்த நெல்லுடன் கண்ணீர் மல்க விவசாயி கோரிக்கை !
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் ஆட்சியர் சங்கீதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மதுரை வாடிப்பட்டி தாலுக்கா ஐயங்கோட்டை பகுதியில் சேர்ந்த முருகன் முளைத்த நெல்லுடன் நெல்லை கொள்முதல் செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
மதுரை வாடிப்பட்டி தாலுக்கா அய்யங்கோட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் அய்யங்கோட்டை பகுதியில் இரண்டு கொள்முதல் மையமாக பிரிக்கப்பட்டு வியாபாரிகளின் நெல்லை மட்டும் கொள்முதல் செய்வதாகவும், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதில் ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் லஞ்சம் வேண்டுமென கூறுவதாகவும் இல்லை என்றால் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் விவசாயி புகார் தெரிவித்தார்.
இதனால் 15 நாட்களுக்கு மேலாக நெல் களத்திலேயே இருந்ததால் நெல் முளைத்து விட்டதாகவும், அந்த முளைத்த நெல்லுடன் இன்று நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வந்த ஐயங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இது குறித்து முறையிட்டு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது.
நெல் கொள்முதல் செய்யும் அதிகாரிகளுக்கு ஒரு பைசா கூட லஞ்சம் தர மாட்டேன் பல லட்சம் செலவு செய்து விவசாயம் செய்து அந்த நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை. அந்த லஞ்சம் கேட்ட அதிகாரி முத்துவேல் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.