இறுதி ஊர்வலத்தில் வெடித்த நாட்டு வெடி ! ஒருவர் பலி ! துறையூர் சோகம் !
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த ஆலத்துடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக மாவட்ட பிரதிநிதி அசோக்ராஜ் என்பவரின் தாயார் ராஜமணி என்பவர் வயது மூப்பு காரணமாக இருந்து விட்டார்.

இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி வெடித்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு இன்றி அனுமதி இல்லாத நாட்டு வெடி வெடித்த பொழுது ஊர்வலத்தில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சேவகன் (68) சரவணன் (50) கார்த்திக் (25) தீனா (38) மதியழகன் உள்ளிட்ட 12 பேருக்கு மேல் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் துறையூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அங்கு ஸ்ரீதர் வயது 21 என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
— ஜோஷ்.