டாக்டர்.அம்பேத்கார் சிலைக்கு மரியாதை செய்த கம்யூனிஸ்ட் கட்சியினர்!
பாபா சாகிப் டாக்டர் B.R.அம்பேத்கார் அவர்களின் 135 வது பிறந்த தினத்தையொட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் 4/04/2025 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நிகழ்ச்சியில் CPI மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். சிவா, AITUC மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ் M.C. மாவட்ட துணை செயலாளர் சி. செல்வகுமார், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் எம்.ஆர். முருகன், கிழக்கு பகுதி செயலாளர் S. சையது அபுதாஹீர், ஆட்டோ சங்க தோழர்கள் முருகேசன், அப்துல் ஷரீஃப், நூர்தீன் ராஜகோபால், தாயுமானவர், அல்லா பிச்சை, செல்வம், ராமச்சந்திரன், மகேந்திரன், பரமசிவம், பக்ருதீன், கணேசன், தர்மராஜ், பிரகாஷ், காளியப்பன், அப்பாஸ், R அசோக், கிழக்கு பகுதி அருண், உசேன், போக்குவரத்து அன்பழகன், துரைராஜ் மற்றும் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.