’குட் பேட் அக்லி’ சக்சஸ் மீட் மேட்டர்ஸ்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அஜித் & ஆதிக் ரவிச்சந்திரன் காம்போவின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10– ஆம் தேதி ரிலீஸாகி செம ஹிட்டாகியுள்ளது. இதனால் படத்தின் சக்சஸ் மீட் ஏப்ரல் 16- ஆம் தேதி மதியம் சென்னையில் நடந்தது.

நன்றி சொல்லிப் பேசியவர்கள்…             

Kauvery Cancer Institute App

எடிட்டர்  விஜய் வேலுக்குட்டி

“மார்க் ஆண்டனி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வாய்ப்பு கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் சாருக்கு நன்றி. இந்தப் படம் ப்ளே கிரவுண்ட் போல. எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற சுதந்திரத்தை இயக்குநர் கொடுத்தார். அஜித் சார் படத்தில் பணிபுரிந்தது எனக்கு பாக்கியம். என்னுடைய அணி மற்றும் படக்குழுவினருக்கு நன்றி”

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

டான்ஸ் மாஸ்டர் கல்யாண்,

“இப் படத்தின் அனுபவம் செம மாஸ். ஒவ்வொரு ஃபிரேமையும் ஆதிக் செதுக்கி இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழுக்கு வந்தது மிகப்பெரிய வரம். அஜித் சார் என்றாலே வேற லெவல் எனெர்ஜிதான்”.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம்,

“ஆதிக் சாருடைய அப்பா ரவி சார் தான் என்னை ‘மார்க் ஆண்டனி’ படத்திலும் சஜெக்ட் செய்தார். எல்லாருமே இந்தப் படத்தில் ஃபேன் பாயாக மாறிதான் வேலை பார்த்தோம். இதுபோல படம் எடுக்க மைத்ரியால் மட்டும்தான் முடியும். என்னுடைய டீமுக்கு நன்றி”.

’குட் பேட் அக்லி’ சக்சஸ் மீட்
’குட் பேட் அக்லி’ சக்சஸ் மீட்

ஃபைட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர்,

“மூன்றாவது முறையாக வாய்ப்புக் கொடுத்த அஜித் சாருக்கு நன்றி. ஆதிக் சாருடன் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் வேலை பார்த்தேன்”.

காஸ்ட்யூம் டிசைனர் அனு வர்தன்,

“இந்தப் படம் எனக்கு வித்தியாசமான அனுபவம். தயாரிப்பாளருக்கும் டைரக்டர் ஆதிக்கிற்கும்நன்றி. படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி”.

நடிகர் கார்த்திகேய தேவ்,

“என் இயக்குநர் ஆதிக்கிற்கு நன்றி. அஜித் மிகவும் இனிமையானவர். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அஜித்- த்ரிஷாவுடன் நடித்தது எனக்கு பெரிய சாதனை”.

நடிகர் அர்ஜூன் தாஸ்

நடிகர் அர்ஜூன் தாஸ்
நடிகர் அர்ஜூன் தாஸ்

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

“எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அனைவருக்கும் நன்றி. சுரேஷ் சந்திரா சாருக்கு நன்றி. கடந்த 2013ல் இருந்து அஜித் சார் என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். அஜித் சார் படத்தில் வேலை செய்வது எனக்கு பெரிய ரெஸ்பான்ஸ்பிலிட்டி. என்னை புஷ் செய்து வேலை வாங்கிய டான்ஸ் மாஸ்டர்கள் அசார் மற்றும் கல்யாண், மியூசிக் டைரக்டர் ஜி.வி சார் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”

நடிகர் பிரசன்னா,

“அஜித் சாருடன் வேலை செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. ‘மங்காத்தா’ பட சமயத்தில் வெங்கட்பிரபு என்னை அழைத்திருந்தார். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. அஜித் சாரின் ஒவ்வொரு படம் அறிவிக்கும்போது வாய்ப்பு அருகில் வந்து நடக்காமல் போகும். முதல் நாள் இந்தப் படத்தின் செட்டில் அவரை சந்திக்கும் போது, என்னை முந்திக் கொண்டு, பல வருடம் தள்ளிப் போனது இப்போது நடந்திருக்கிறது எனச் சொல்லி என்னைக் கட்டிப் பிடித்தார் அஜித் அந்த ஒரு விஷயம் எனக்கு போதும். என் கனவை நிறைவேற்றியதற்கு ஆதிக்கிற்கு நன்றி”.

நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர்,

ப்ரியா பிரகாஷ் வாரியர்,
ப்ரியா பிரகாஷ் வாரியர்,

“என்னுடைய இரண்டாவது தமிழ்ப் படத்துக்கே இப்படியான வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. படத்தில் ’AK64’ என ஒரு ஹிண்ட் கொடுத்திருக்கீங்க ஆதிக். இந்த மேடையில் ஓப்பனாகவே வாய்ப்பு கேட்கிறேன். என்னையும் அந்த படத்துல நடிக்க வைக்க ரெக்கமன்ட் பண்ணுங்க. தமிழ் மக்களுக்கு ரொம்ப நன்றி”.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்,

“18 வருடங்கள் கழித்து அஜித் சாருடைய படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு பிளாக்பஸ்டர் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக உள்ளது. ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’, ‘மார்க் ஆண்டனி’ இப்போது ‘குட் பேட் அக்லி’ என ஆதிக்குடன் மூன்று ஹிட் படங்கள் கொடுத்திருப்பதில் சந்தோஷம். தயாரிப்பாளர்கள் ரவி சார், நவீன் சாருக்கும் நன்றி. என்னுடைய டீமுக்கும் நன்றி.. இந்தியா மட்டுமில்லாமல் ஸ்ரீலங்கா, மலேசியாவிலும் படம் நல்ல வசூல் பெற்று வருகிறது. ரசிகர்களுக்கும் நன்றி”.

தயாரிப்பாளர் நவீன்,

”படத்திற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. அஜித் அவர்களுக்கும் இயக்குநர் ஆதிக்கிற்கும் நன்றி”.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்,

“ஏழாவது படிக்கும் ஒரு பையன், ஒரு நடிகரைப் பார்த்து உத்வேகம் அடைந்து, இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்டு இன்று இந்த இடத்தில் நிற்கிறான். நான் அஜித் சார் ரசிகனாக மாறாமல் இருந்திருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன் என்று தெரியவில்லை. சினிமாவுக்கு வராமல் வேறு ஏதாவது வேலை செய்து கொண்டு இருந்திருப்பேன். அஜித் சாரின் ரசிகராக இருந்தால், என்ன நடக்கும் என்பது இந்த தருணத்தில் எனக்கு நிதர்சனம் ஆகியுள்ளது.

நான் எப்போதும் அஜித் சாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். நாங்கள் சந்தித்துக் கொள்ளும் போது நான் சரியான சினிமா வாழ்க்கை இல்லாத இயக்குநர். பெரிய ஹிட் இல்லாத இயக்குநர். எனது முதல் படம் மட்டுமே ஹிட் கொடுத்தது. ஆனால், அஜித் சாரைப் பொறுத்தவரையில் எப்போதும் யாரிடமும் வெற்றி தோல்வியை பார்த்தது கிடையாது. ஒரு சக மனிதராக தான் பார்ப்பார். என்னிடம் இருந்து அவர் என்ன கவனித்தார் என்பது எனக்கு இப்போதுவரை கேள்வியாக உள்ளது..

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

இந்த தருணத்தில் நான் சுரேஷ் சந்திரா சாருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். அஜித் சார் என்னை நம்பிய அளவுக்கு நீங்களும் என்னை நம்பினீர்கள். இங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோக்களைப் பார்க்கும்போது மிகவும் எமோஷனலாகிவிட்டேன். அந்த கூட்டத்திற்குள் இருந்தவன்தான் நான். அஜித் சார் தன்னை எப்போதும் பெரிய ஸ்டாராக கருதியது கிடையாது.  தன்னை ஒரு நடிகராக மட்டுமே நினைக்கிறார்.படத்தின் டைட்டிலை முடிவு செய்தது அஜித் சார்தான். அதில் இருந்து, இரவோடு இரவாக டப்பிங் முடித்துவிட்டு அவர் ரேஸுக்கு கிளம்பும் வரை தன்னால் முடிந்த அனைத்தையும் இந்த படத்திற்காக கொடுத்துள்ளார். ஐ லவ் யூ அஜித் சார்.

நான் எனது மனைவியிடம் ஐ லவ் யூ சொன்னதை விடவும் உங்களுக்குத்தான் அதிகம் ஐ லவ் யூ சொல்லி உள்ளேன். அதுதான் உண்மையும் கூட. எனது மனைவியை விட உங்களைத் தான் சார் அதிகம் நேசிக்கிறேன். எனது பெற்றோருக்கு அடுத்து எனது வாழ்க்கையில் இருப்பது நீங்கள் தான் சார்” என எமோஷனலானார்.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.