2 பவுன் தங்க செயினை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் மற்றும் துாிதமாக செயல்பட்ட காவலா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்!
தலைப்பு : திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவலர்களுக்கும், பொது இடத்தில் கேட்பாரற்றுக் கிடந்த தங்க நகையினை காவல்துறையிடம் ஒப்படைத்த நபரின் நேர்மையை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கியது தொடர்பாக
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலையம், மணப்பாறை மாரியம்மன் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்ததில் கலிங்கப்பட்டி நடுப்பட்டியைச் சேர்ந்த சங்கக்கவுண்டர் மனைவி பெரியம்மாள் 70/25 என்ற மூதாட்டியிடம் 2 1/2 தங்க செயினை பறித்து சென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தேவி வயது 43 மற்றும் ஆர்த்தி வயது 39 ஆகிய இரு பெண் குற்றவாளிகளையும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மணிகண்டன் என்பவர் உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து மணப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்த செயலை பாராட்டியும்.
2) ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு பகுதியில் வாகன தனிக்கையின் போது இரு சக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா எடுத்து சென்ற இரண்டு குற்றவாளிகளை பிடித்து அவர்களிடம் இருந்த கஞ்சா போதை பொருட்களை பறிமுதல் செய்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. சுப்ரமணியன், முதல் நிலை காவலர் கார்த்திக், காவலர் ஜெகதீஸ் மற்றும் மண்ணச்சநல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் சதீஸ்குமார் ஆகியோர்களின் செயலை பாராட்டியும்.
3) சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சமயபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே கேட்பாரற்று கீழே கிடந்த 2 பவுன் தங்க செயினை சமயபுரம் போக்குவரத்து தலைமை காவலர் சிவக்குமார் மற்றும் வெங்கங்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான துரைராஜ் மகன் முருகானந்தம் ஆகியோர் எடுத்து சமயபுரம் காவல் ஆய்வாளர் அவர்களிடம் ஒப்படைத்ததன் நேர்மையை பாராட்டியும். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வ நாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் இன்று (22.04.2025) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.