மதுரையில் சூரி உணவகத்தை நடத்தி வரும் சகோதரர் லட்சுமணணின் அராஜகம் உணவகத்திற்காக அச்சகத்தை மூடிய சம்பவத்தால் பரபரப்பு….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

நடிகர் சூரியின் சகோதரர் கொலை மிரட்டல் விடுப்பதால் உயிருக்கு பயந்து ஆட்சியரிடம் புகார் அளித்ததாக பாதிக்கப்பட்ட முத்துச்சாமி மதுரையில் பேட்டி…

மதுரை நரிமேடு பகுதி சோனையார் கோவில் மெயின்ரோடு பகுதியில் அலைகள் அச்சகம் என்ற கடையை நடத்தி வருபவர் முத்துச்சாமி இவர் கடந்த ஏழு வருடமாக அந்த பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வாராந்திர குறைதீர்ப்பு மனு நாள் கூட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரிடம் முத்துச்சாமி புகார் மனு அளித்தார் மாவட்ட ஆட்சியரிடம் அவர் அளித்த புகார் மனுவில்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

தான் நடத்தி வரும் அலைகள் அச்சகம் கடைக்கு கீழே நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் என்பவர் நடத்தி வரும் அம்மன் உணவகம் தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும் இருவருக்கும் பொது பாதையை லட்சுமணன் ஆக்கிரமித்ததோடு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் உணவாக வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்கிறார்.

சகோதரர் லட்சுமணணின் அராஜகம்தொடர்ந்து, 10க்கு மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகிறது. பள்ளி வாகனம் செல்ல முடியாமலும். அதோடு அவசர உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தனது கடைக்குள் அனுமதியில்லாமல் அத்துமீறி உள்ளே நுழைந்து பூட்டை உடைத்து சேமிப்பு பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் மாடிக்கு செல்லும் பாதைக்கு பூட்டு போட்டு விட்டதாகவும்,

வீட்டு உரிமையாளரிடம் கூடுதல் பணம் தருகிறேன் மாடியில் இருப்பவரை காலி செய்து தன்னிடம் கொடுங்கள் என வீட்டு ஓனருக்கும் தனக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி அராஜக செயலில் ஈடுபடுகிறார் என முத்துச்சாமி ஆட்சியர் சங்கீதாவிடம் பரபரப்பாக புகார் அளித்தார். நடிகர் சூரிக்கு தெரிந்து தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதா.? அல்லது அவரது பெயரை கெடுப்பதற்காக அவரது தம்பிகள் இது போன்ற தவறுகள் செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. அவர்கள் தொழில் நடத்துவது குறித்து நான் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.

ஆனால் இது போன்ற அராஜக செயலில் ஈடுபட்டும் அவரது சகோதரர் லக்ஷ்மணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை மிரட்டல் விடுப்பதாகவும் உயிருக்கு பயந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். நடிகர் சூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவது வேதனை அளிக்கிறது என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.