அதிமுக மாவட்டச் செயலாளராக வலம் வரும் டி.எஸ்.பி.!
அதிமுக மாவட்டச் செயலாளராக வலம் வரும் டி.எஸ்.பி.!
மாங்கனி மாவட்டத்தில் ஒதுக்குப்புறமான காவல் நிலைய எல்லையின் டி.எஸ்.பி-யாக இருந்து வருபவர் அந்த ’க்ஷ் புள்ளி’ அதிகாரி.
கடந்த சில மாதங்களுக்கு முன் போலி சான்றிதல் கொடுத்து டி.எஸ்.பி-யாக பதவி பெற்றவர்களை தேர்வு ஆணையம் கண்டுப்பிடித்து லிஸ்ட் எடுத்ததில் இவரது பெயரும் அதில் இடம் பெற்றிருந்தது.
பின்னர் அந்தப் பிரச்னையில் இருந்து வெளியில் வந்தவர் கொஞ்ச நாள் அமைதியோ அமைதியாக இருந்து வந்தார். தற்போது அதிமுக-வின் மாவட்டச் செயலாளராக வலம் வரத்தொடங்கியுள்ளார்.
காரணம், ஐயாவுக்கு எடப்பானவரின் நிழலாக இருப்பவர் போன் செய்தால் போதும்.. அண்ண சொல்லுங்கன்னன்னு நாற்காலியில் ஏறி நின்றுக் கொண்டு பேசுகிறாராம்.
கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக நகரச் செயலாளரின் குடும்ப பிரச்னைக்கு தாமகவே ஆஜராகி அண்ணன் பேசி முடிக்க சொன்னார் என்று கூறி பிரச்னையை முடித்துள்ளார். அதுமட்டுமா அதிமுக-வினரின் வழக்குகளை தாமாகவே முன்வந்து சரி செய்கிறாராம் அந்த க்ஷ் புள்ளி அதிகாரி!
-ஆதிரன்