அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மக்களின் பெரும் ஆதரவுடன் நிறைவுபெற்ற தூத்துக்குடி நெய்தல் கலைத் திருவிழா 2025!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 அன்று (13/06/2025) தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

கலைத் திருவிழா 2025நிறைவு நாளான (15/06/2025) தூத்துக்குடி அரசு மாவட்ட இசைப் பள்ளி, நெய்தல் கலைக்குழு, நெய்தல் கலைக்குழு, கலைவாணர் பெருமுரசு கலைக்குழு, உவரி களியல் கலைக்குழு, ஃபோக் மார்லி அந்தோணி தாசனின் இசைக்குழு ஆகிய மண் சார்ந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சியைக் கனிமொழி கருணாநிதி எம்.பி கண்டு மகிழ்ந்தார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

முன்னதாக, தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளைக் காட்சிப்படுத்தும் விதமாக உணவு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த உணவு அரங்குகளுக்கு கனிமொழி எம்.பி நேரில் சென்று, அரங்குகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, பல வகையான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கலைத் திருவிழா 2025மேலும், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் கைவினைப் பொருட்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கனிமொழி எம்.பி கலந்துரையாடினார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இந்த கலை நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வா்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

—    மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.