மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் தொடா்ந்து புகார் மனு அளிக்கும் அதிமுக தொண்டர்கள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

எடப்பாடி பழனிசாமியை  தவறாக சித்தரித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அமைச்சர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ்சத்யன் ஆகியோர், மதுரை மாநகர்  காவல் துறை  ஆணையரிடம் தனித்தனியாக புகார் மனு அளித்தனர்.. .

இதுகுறித்து எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில் …

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

எடப்பாடியாரை ஏளனப்படுத்தி, அவமானப்படுத்தும் வகையில் கார்ட்டூனை வெளியிட்டுள்ளனர்., விமர்சனங்களை தாங்கிக் கொள்கிற பக்குவம் எல்லோருக்கும் உண்டு.

ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆனால், இது நேரடியாக தனிப்பட்ட முறையில் அவதூறான படத்தை சித்தரித்து தொண்டர்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி அதன்மூலம் எங்களை அரசியல் ரீதியாக களங்கப்படுத்த முயல்கிறார்கள்.

இதுவரை அவல ஆட்சி என்று சொல்லி வந்தோம் இப்போதைய இதை ஆபாச ஆட்சி என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது. அதிமுக ஐ.டி.விங் நிர்வாகிகளை சாதாரண விஷயங்களுக்கு கூட கைது செய்கிறார்கள். ஆனால் ஆளுங்கட்சியை சேர்ந்த ஐடி விங் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.

திருப்பரங்குன்றம் குடமுழுக்கு நடப்பதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அது சார்ந்த எந்தவித முன்னேற்பாடு பணிகளையும் செய்யவில்லை. திருச்செந்தூரில் காட்டுகிற ஆர்வத்தை அறநிலையத்துறை இங்கு காட்டவில்லை.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

மேலும் குடிநீர் திட்டங்கள் சாலை பணிகள் எதையும் இன்னும் செய்யவில்லை , அதேபோல ரோப் கார் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை வாகன நிறுத்தம் திட்டத்தை நிறைவேற்றவில்லை என கூறினார்

ராஜ்சத்யன் கூறியதாவது…

கீழடி நாயகர் என்றால் அது எடப்பாடியார் தான். கீழடிக்கான எல்லா பணிகளையும் துவக்கியது அதிமுக ஆட்சி காலத்தில் தான். வரலாற்றை திரிப்பதில் திமுகவிற்கு பெரும் பங்கு உண்டு. அதிலும் அரசியல் வரலாற்றை மடைமாற்றம் செய்து தங்களுக்கு ஆதாயமாக மாற்றிக் கொள்ளும் வேலையை எப்போதும் செய்வார்கள். அப்படி இப்போதும் மிக இழிவான வகையில் ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளார்கள் திமுக ஐடி வின் நிர்வாகிகள். இதுவரைக்கும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கிறார்கள் என பார்க்கலாம். அதிமுக எப்போதும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததில்லை. காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்வோம்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது…

அமைச்சர் என்பவர் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் யாராலும் ஏற்க முடியாத அருவருக்கத்தக்க வகையில் எடப்பாடியாரை சித்தரித்து, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் இயங்குகிற ஐடி விங் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். இது அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து மக்களிடமும் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக கொண்டு செல்வதை விட்டுவிட்டு திமுக அரசு எடப்பாடி பழனிசாமியை அவதூறாக சித்தரித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை எத்தனையோ அரசியல் இயக்கங்கள் விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததில்லை.

 

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.