‘லவ் மேரேஜ்’-க்கு பெருமாளின் ஆசி கிடைக்கும்” தயாரிப்பாளரின் நம்பிக்கை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அஸ்யூர் பிலிம்ஸ்’ பேனரில் டாக்டர் ஸ்வேதாஸ்ரீ & டாக்டர் தீரஜ்   தயாரிப்பில் ஷண்முக பிரியன் டைரக்‌ஷனில்  விக்ரம் பிரபு—சுஷ்மிதா பட் நடித்து வரும் 27—ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘லவ் மேரேஜ்’. இப்படத்தில் சத்யராஜ், ரமேஷ் திலக், அருள்தாஸ், முருகானந்தம், மீனாட்சி தினேஷ், கஜராஜ், கோடாங்கி வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : மதன் கிறிஸ்டோபர், இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் : பரத் விக்ரமன். பி.ஆர்.ஓ. : யுவராஜ். படத்தை தமிழ்நாடெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுகிறார் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன். படத்தில் ஒருபாடலை டைரக்டர் மிஷ்கின் பாடியுள்ளார்.

27—ஆம் தேதி  ரிலீஸாவதால், படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, 19ஆம் தேதி மதியம் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Kauvery Cancer Institute App

விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு

படத்தில் சின்ன கேரக்டர்களில் நடித்தவர்கள் வழக்கம் போல் டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி சொன்னார்கள். ”மாப்பிள்ளை அழைப்பு பற்றி சமீபமாக தமிழ் சினிமாவில் பாட்டு வந்ததில்லை. அதனால் இந்தப் படத்தில் அதுகுறித்து ஒரு பாடலும் மற்ற இரண்டு பாடல்களும் எழுதியிருக்கேன்” என்றார் பாடலாசிரியர் மோகன்ராஜன். படத்தின் இயக்குனர் ஷண்முகப்ரியன் எம்.பி.பி.எஸ்.படித்தவர் என்பதை சில சம்பவங்களுடன் சொன்னார் நடிகர் முருகானந்தம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அறிமுக ஹீரோயின் சுஷ்மிதா பட் பேசும் போது, “இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்ப்பு கிடைத்தது கடவுளின் ஆசி தான். அனுபவமிக்க இளைஞர்களுடன் பணியாற்றியதும் பாக்கியம் தான். லவ் மேரேஜுக்கு சப்போர்ட் பண்ணுங்க” என்றார்.

சுஷ்மிதா பட்
சுஷ்மிதா பட்

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், “ஒரு படத்திற்கான பாஸிட்டிவிட்டியை முதலில் பரப்புவது அப்படத்தின் டைட்டில் தான் என்பதை நம்புவன் நான். லவ் மேரேஜ் என்ற இந்த டைட்டிலும் அப்படித்தான். என்னுடைய மச்சான் விக்ரம் பிரபு கடின உழைப்பாளி. அவர் ஹீரோவாக மட்டுமே நடிக்கக் கூடாது, வில்லனாகவும் நடிக்க வேண்டும்”.

தயாரிப்பாளர் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ, “எல்லோருக்கும் முதல் குழந்தை கடவுளின் ஆசி என்பார்கள். அதுபோலத்தான் எங்களின் முதல் தயாரிப்பான இந்த லவ் மேரேஜ் படம். கண்டிப்பாக கடவுள் பெருமாளின் ஆசி இப்படத்திற்குக் கிடைக்கும், வெற்றி பெறும். அதே போல் விக்ரம் பிரபுவை வைத்துத் தான் முதல் படம் தயாரிக்க வேண்டும் என்ற எங்களின் ஆசையும் நிறைவேறியுள்ளது. படத்தில் நடித்த சத்யராஜ் உட்பட அனைத்து நடிகர்களுக்கும் மற்ற டெக்னீஷியன்களுக்கும் நன்றி. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசிக்கும் வகையில் எடுத்துள்ளோம். மீடியாக்களின் ஆதரவுடன் படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது”.

“தமிழர்களுக்கென ஒரு அடையாளம் இருக்கு. அந்த அடையாளம் இப்படத்தின் கதையை இயக்குனர் சொன்ன போது இருந்தது. அதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்றார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.

இயக்குனர் ஷண்முகப்ரியன்
இயக்குனர் ஷண்முகப்ரியன்

இயக்குனர் ஷண்முகப்ரியன், “தயாரிப்பாளர் ஸ்வேதாவின் நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என நம்புகிறேன். இக்கதைக்கு விக்ரம் பிரபு ஹீரோ என முடிவு செய்து நண்பர்களிடம் சொன்ன போது, அவர் ஆக்‌ஷன் ஹீரோ, எனவே இக்கதைக்கு செட்டாகமாட்டார் என்றார்கள். அந்த நேரத்தில் தான் அவரின் இறுகப்பற்று ரிலீசானது. அதைப் பார்த்ததும் கன்ஃபார்ம் பண்ணிட்டேன். கதை சொன்னதும் ஓகே சொன்னவர், ஷூட்டிங் முடியும் வரை என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. கல்யாணம் ஆகாத ஆண்கள்-பெண்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்”.

ஹீரோ விக்ரம் பிரபு, ”டைரக்டர் சொன்ன கதைக்கு நான் மட்டுமல்ல, ஒட்டு மொத்த படக்குழுவும் சிறந்த பங்களிப்பைக் கொடுத்துள்ளோம். படத்தின் பெரிய சப்போர்ட்டாக இருப்பது ஷான் ரோல்டனின் இசை தான். அதே போல் எல்லா டெக்னீஷியன்களும் கடுமையாக உழைத்துள்ளனர். என்மீது எப்போதும் அன்பு செலுத்தும் மீடியா நண்பர்கள் இப்படத்தையும் வெற்றி பெறச் செய்வீர்கள் என்ற நம்புகிறேன்”.

 

—    மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.