திருட்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், வடக்கு காட்டூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் 42/25, த.பெ தட்சிணாமூர்த்தி என்பவரிடம், எதிரி விமல் 34/25 த.பெ கருப்பசாமி காளியம்மன் கோவில் தெரு. வாழவந்தான் கோட்டை, துவாக்குடி என்பவர் கடந்த 01.06.2025-ம் தேதி கத்தியை காட்டி ரூ.750/- பணத்தை கொள்ளையடித்தது தொடர்பாக எதிரி மீது துவாக்குடி காவல் நிலைய குற்ற எண். 336/25 U/s 309(4) r/w 311 BNS ए फ्री அடைக்கப்பட்டார். மேலும் எதிரி விமல் மீது துவாக்குடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.

192/25, U/s 309(6) BNS-வழக்கின் எதிரி விக்னேஷ் (எ) விக்கி 20/25, த.பெ பழனிச்சாமி, காவல்கார தெரு, இனாம் சமயபுரம், என்பவர் புகார்தாரர் சிவக்குமார் 23/25 த.பெ நடேசன், வேங்கைகுறிச்சி, ஆர்ச்சம்பட்டி, குளித்தலை என்பவரிடம் கடந்த 27.05.2025-ம் தேதி கத்தியை காட்டி பணம் ரூ.2000 மற்றும் Vivo Touch Phone 1 ஆகியவற்றை பறித்து சென்றதாக எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய எதிரிகள் விமல் மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நேற்று 24.06.2025-ஆம் தேதி சிறையில் உள்ள எதிரிகளிடம் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 48 தடுப்பு காவல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.