திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு மற்றும் தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை கூட்டம்

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள படைக்கலத் தொழிற்சாலை (OFT) மற்றும் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் ஆகிய இரு இடங்களில் தேசிய பாதுகாப்பு படை (NSG). தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை ஆகியோரின் கூட்டு தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை நடைபெறவுள்ளது.

மேற்படி கூட்டு தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செ. செல்வநாகரெத்தினம், இ.கா.ப.,  தலைமையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய பாதுகாப்பு படையின் 27-ம் ஒருங்கிணைந்த சிறப்பு படைப்பிரிவின் கர்னல் அங்குஸ் சர்மா, தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை அலுவலர்களுடன்  25.06.2025 திருச்சி மாவட்ட காவல் அலவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 26.06.2025 -ம் தேதியன்று படைக்கலத் தொழிற்சாலை (OFT) யிலும், 27.06.2025 அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலிலும் கூட்டு தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை நடைபெற இருக்கிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பயிற்சி ஒத்திகை
பயிற்சி ஒத்திகை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் காவல் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படைக்கலத் தொழிற்சாலை (OFT) சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் இலால்குடி காவல் உட்கோட்டம். சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் நடைபெறவுள்ள மேற்படி தீவிரவாத தடுப்பு கூட்டு பயிற்சி ஒத்திகை தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.