நியோமேக்ஸ் – இதுவரை புகார் கொடுக்காதவர்களின் கதி என்ன ?
NEOMAX | நியோமேக்ஸ் | இதுவரை புகார் கொடுக்காதவர்களின் கதி என்ன ?
நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக, நடைபெற்று வரும் நியோமேக்ஸ் வழக்கு விசாரணையில், சில புகார்தாரர்களின் பெயர்களை இந்த தீர்வுத்திட்ட பட்டியலுடனே சேர்க்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது, காட்டமாகவே பதிலளித்த நீதியரசர் பரதசக்ரவர்த்தி, அவர்கள் வீட்டிலேயே அமர்ந்துகொண்டால் அவர்களது பிரச்சினை என்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.
தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சமயத்திலேயே, தமிழ் மற்றும் ஆங்கில தினசரியில் விளம்பரம் அறிவித்து புகாரை பெற வேண்டுமென்று சொல்லியிருந்தேன். அப்போதே புகார் கொடுத்திருக்கலாமே? என்றெல்லாம் கருத்து தெரிவித்தவர். இதுவரை புகார் கொடுக்காதவர்கள் இனி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என்பதாகவும்; அவ்வாறு புகார் அளிப்பவர்களின் பட்டியலை தனிப்பட்டியலாக தயாரித்து கொள்ள வேண்டும் என்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பின்னணியில், ஏன் இதுவரை பலரும் புகாருக்கே செல்லாமல் இருக்கிறார்கள்? ஐ.டி. குறித்த அச்சம். இ.டி. வந்துவிடுமோ என்ற பயம். பெரும்பாலும் ரத்த சொந்தங்களின் வழியாகவே முதலீடு செய்திருப்பதால், அவர்களுக்கு எதிராக புகார் கொடுக்கலாமா? என்ற மனநிலை. நிறுவனத்தின் பேச்சை நம்பி காத்திருப்பது. புகார் கொடுத்துவிட்டால், நிறுவனம் பொறுப்பு ஏற்காது, கைவிட்டுவிடும் என்ற அச்சம். என பல்வேறு காரணங்கள் பின்னணியில் இருக்கின்றன.
அடுத்தடுத்து, நியோமேக்ஸ் நிறுவனம் பிசகாத அளவுக்கு நீதிமன்றம் செக் வைத்து வரும் நிலையில், மிக முக்கியமாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் பினாமி சொத்துக்கள் ஒவ்வொன்றாக அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், இனியும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பேச்சை நம்பி புகார் கொடுக்காமல் இருப்பது சாதகமா? பாதகமா? என்ற கேள்வி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் மெல்ல எழத் தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில், புகார் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதான பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் குழப்பங்கள் – அதன் பின்னணி குறித்து அலசுகிறது, இந்த வீடியோ !