துறையூர் – காரில் கடத்திவரப்பட்ட 472 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!
திருச்சி மாவட்டம் துறையூர் பைபாஸ் சாலையில் உள்ள சொரத்தூர் ரவுண்டானா அருகே இன்று அதிகாலை துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் முத்தையன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வடிவேல், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெரம்பலூரில் இருந்து சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை மறித்து சோதனை செய்ய முயன்றபோது காரில் வந்த மர்மநபர்கள் போலீசாரை கண்டதும் காரை லாக் செய்துவிட்டு இறங்கி தப்பி ஓடி உள்ளனர்.
இதை அடுத்து ரெக்கவரி வேன் மூலம் காரை காவல் நிலையம் எடுத்து வந்த போலீசார் கார் லாக்கை உடைத்து உள்ளே பார்த்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 57 மூட்டைகளில் 472 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
வாகனத்தின் எண்னை சோதனை செய்த போது அது போலியானது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
472 கிலோ குட்கா பொருட்கள் காரில் கடத்தி வந்த சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.