ஜனநாயகன்’ கதி? விஜய் பேச்சு! வெட்டிப் பேச்சா? கெட்டிப் பேச்சா?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

எங்களுடன் விஜய் கூட்டணிக்கு வருவாரா? மாட்டாரா? என்பதை தேர்தல் நெருக்கத்தில் தான் சொல்ல முடியும்” என பத்து நாட்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் சொல்லியிருந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஒரு மாதத்திற்கு முன்பு மீடியாக்களிடம் பேசிய தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை கூட, “எங்கள் கூட்டணிக்கு வருவதைப் பற்றி விஜய் தான் முடிவு செய்ய வேண்டும். சில மாதங்கள் கழித்து அவரே இதை சொல்வார்” என உருட்டல், மிரட்டல் பாணியில் சொன்னார்.

அமித்ஷா
அமித்ஷா

Sri Kumaran Mini HAll Trichy

தமிழ்நாடு பா.ஜ.க.வின் புதுத் தலைவர் நயினாரும் கூட இதே டெம்ப்ளேட்டில் தான் பேசினார். ஆனால் தமிழ்நாட்டின் கூட்டணித் தலைமையான அதிமுக சைடிலிருந்து விஜய் குறித்து எந்த சைடு எஃபெக்டும் தெரியவில்லை. ஏன்னா நான்கு மாதங்களுக்கு முன்பு, த.வெ.க.வின் ஆதவ் அர்ஜுனா என்கிற அரசியல் அரைவேக்காடு மூலம் அதிமுக தரப்பிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கதை கிளப்பிவிடப்பட்டது. அந்தக் கதையில் 234 தொகுதிகளில் 117 தொகுதிகள் தவெகவிற்கு, மீதி 117 அதிமுகவிற்கு. முதல் இரண்டரை ஆண்டுகள் விஜய் முதல்வர், மீதி இரண்டரை ஆண்டுகள் பழனிச்சாமி முதல்வர்.

இதான் அந்தக் கதையின் மெயின் லைன். இதைக்கூட விஜய்க்கு வில்லுப்பாட்டு பாடும் கூலிப்படை யூடியூபர்கள் கிளப்பிவிட்டது தான். ஏன்னா எப்படியாவது….எப்பாடுபட்டாவது 2026—ல் விஜய்யை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துவிட வேண்டும் என்பது தான் உட்கார்ந்து பேசுபவர்களின் பலே கனவு. ஆனால் பழனிச்சாமி தரப்போ… ‘அட போங்கப்பா நீங்களும் உங்க அரசியலும்’ என ஜகா வாங்கிவிட்டது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

இப்படியும் இன்னும் பல திசைகளிலிருந்தும் விஜய் மீது கூலிப்படைகள் ஃபோகஸ் லைட் அடித்துக் கொண்டிருந்த நிலையில் தான், ஜூலை.04—ஆம் தேதி பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் செயற்குழுவைக் கூட்டினார் கட்சியின் தலைவர் விஜய்.

வழக்கம் போல் கட்சியின் பொ.செ.விலிருந்து தலைமைப் பதவியில் இருக்கும் அனைவரும் உளறிக் கொட்டி கிறுகிறுக்க வைத்தனர். ’அப்படின்னா விஜய் மட்டும் கருத்தாவும் உறுத்தாவும் பேசிட்டாராக்கும்’ என கேட்ராதீக மக்களே. இதற்கு முன்பு நடந்த அரங்கக் கூட்டங்களில் மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்த பேப்பரை போடியத்தில் இருக்கும் மைக்கின் கீழே வச்சுப் பேசுனாரு. இப்ப அந்த பேப்பரை கையிலே வச்சு பேசிருக்காரு. அப்பவும் திக்கித்திணறிப் பேசி மண்டை காயவச்சாரு. இப்ப மட்டும்..? இப்பவும் அதே மாடுலேஷன் தான், அதே மண்டைக் காய்ச்சல் தான்.

இந்த மண்டைக் காய்ச்சலில் மிகமுக்கியமான சங்கதி என்னன்னா.. திமுகவுடனும்  கூட்டணி இல்லை, பா.ஜ.க.வுடனும் கூட்டணி இல்லை என ஓப்பனாக அறிவித்த விஜய், தவெக தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பதையும் செயற்குழு மூலம் ஸ்ட்ராங்காக அறிவித்துவிட்டார்.

இதுநாள் வரை தவியாய் தவித்த விஜய்யின் ரசிககுஞ்சுகள், ‘அப்பாடா… நம்ம தலைவர் சி.எம்.ஆகிருவாருப்பா. வி ஆர் வெரி ஹேப்பி” என்ற குஷி மூடில் இருக்கிறார்கள்.

Flats in Trichy for Sale

சீமான்எல்லாம் சரி தான். விஜய்யின் தலைமையில் கூட்டணின்னா.. அந்தக் கூட்டணிக்கு எந்தக் கட்சி வரும்? 15 வருசமா கூலிக்கு மாரடிக்கும் சீமானின் நா.த.க.வராது. பா.ம.கவில் பல ரூபங்களில் தினசரி ஒரு பூதம் கிளம்பிக்கிட்டே இருக்கு. பா.ஜ.கவுக்கு பயந்து நடுங்கும் அன்புமணியும் வரமாட்டாரு. மகனுக்கு பயந்து நடுங்கும் ராமதாஸின் கதி என்னான்னு அவருக்கே தெரியல. அப்ப தேமுதிக? பெட்டி வெயிட் எங்கேயோ.. அங்கே தேமுதிக இருக்கும். பிரேமலதாவின் பேராசைகளை விஜய்யால் நிறைவேற்ற முடியாது. அதனால் அதுவும் வராது.

ஆளே இல்லாத கடையில டீ ஆத்தும் ஜி.கே.வாசனே வராத போது, வேற யார்தான் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு வருவா?செப்டம்பர் மாதம் டூர் கிளம்புகிறார் விஜய். அது முடிந்து வந்ததும் அக்டோபர்-நவம்பரில் ‘ஜனநாயகன்’ புரமோஷன் ஆரம்பிக்கும். 2026 ஜனவரி.09—ஆம் தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ் என விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த டிசம்பரிலேயே பா.ஜ.க.வின் தலைமையிலிருந்து குடைசல்களும் குத்துக்களும் ஆரம்பமாகும். ‘ஜனநாயகன்’ படத்தை 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள கர்நாடகத்தைச் சேர்ந்த ‘கே.வி.என்.புரொடக்‌ஷன்’ கே.வெங்கட் நாராயணா என்பவருக்கு நெருக்கடிகளும் அமலாக்கத்துரைமார்களின் பகிரங்க மிரட்டலும் ஆரம்பமாகலாம். ஏன்னா இந்த வெங்கட் நாராயணா என்பவர் 2020-ல் தான் சினிமாக்கள் வினியோகத்தை ஆரம்பித்தார்.

“நாலு வருசத்துல விஜய்யை வைத்து படம் தயாரிக்கும் அளவுக்கு உனக்கு எப்படி 400  கோடி வந்துச்சுன்னு” துரைமார்கள் கேட்டா.. நாராயணாவின் கதி என்னாவது?

அப்ப ‘ஜனநாயகன்’ விஜய்யின் கதி?

சிம்புவின் ’வானம்’ படத்தின் இந்த சீன் தான் நமக்கு நினைவில் வந்தது.

பிரம்மானந்தம் : “சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் என்ன வித்தியாசம்?”

சந்தானம் : சிங்கம் லயன் டேட்ஸ் பாட்டல்ல இருக்கும் சார். சிறுத்தை தீப்பெட்டியில இருக்கும் சார்”

2026 ஜனவரியில் அமித்ஷாவிடம் விஜய் : “கூட்டணிக்கு எஸ் சார்.. நீங்க சிங்கம் சார், நான் சிறுத்தை சார்”

 

 —        கரிகாலன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.