திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் பேரவை கூட்டம்
திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக இந்த வருடத்திற்கான துவக்க கூட்டம் நடைபெற்றது.
இறை வேண்டுதலோடு இனிதே இக்கூட்டம் ஆரம்பித்தது. வரவேற்புரையை முனைவர் பியூலா எஸ்தர் தவமணி அவர்கள் வரவேற்றார்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். முனைவர் ஏஞ்சலின் வேதா அவர்கள் துவக்க உரையின் தலைமை உரையை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் முனைவர் ஜே. பிரின்சி மெர்லின் அவர்கள் தலைமை உரையாற்றினார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முனைவர் செல்வகுமார் அவர்கள் பங்கு பெற்று வேதியியல் துறையில் அநேக வேலை வாய்ப்புகள் உள்ளன மாணவர்கள் அதை தக்க விதத்தில் பயன்படுத்திக்கொண்டு சர்வதேச அளவில் வெற்றியாளர்களாக சாதனையாளராக வரவேண்டும் என்று சொல்லி அறிவுரை கொடுத்தார். சிறப்பு விருந்தினர் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவின் முடிவில் நன்றி உரையை முனைவர் லட்சுமி பிரபா அவர்கள் வழங்கினார்கள். வேதியல் துறை சார்ந்த துறை தலைவர் முனைவர் வயலட் தயாபரன் அவர்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். ஏறக்குறைய 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனை பங்கு பெற்று சிறப்பு அடைந்தனர். இவ்விழாவின் முடிவில் இந்த வருடத்திற்கான தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் அலுவலக நண்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்யப்பட்டது.