அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிப்பட்ட மின்வாரிய அதிகாரி !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி, செங்குறிச்சியைச் சேர்ந்த பிரவின்குமார் என்ற கட்டிட மின் வயரிங் செய்பவர், திருச்சி, மணிகண்டம், மேக்குடி கிராமத்தில் வீடு கட்ட இருக்கும் கோவிந்தராஜ் என்பவருக்காக அவரது வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்ததன் பேரில், தற்காலிக மின் இணைப்பு வழங்க, ஏற்பாடு செய்ய திருச்சி, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் அருளாணந்தம், வயது 48/25, த/பெ ஆரோக்கியம் என்பவரை அணுகியபோது கடந்த 08.07.2025ந்தேதி, அருளாணந்தம் ரூ.10,000/- கையூட்டு கேட்டுள்ளார்.

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

அருளாணந்தம்
அருளாணந்தம்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அதன் தொடர்ச்சியாக 09.07.2025ந் தேதி பிரவின்குமார் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,  10.07.2025ந் தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர்ராணி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது வணிக ஆய்வாளர் அருளாணந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.