ஹீரோவானார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ டைரக்டர்
‘குட் நைட்’, ‘லவ்வர்’, டூரிஸ்ட் ஃபேமிலி’ என ஹாட்ரிக் ஹிட் படங்களைத் தயாரித்த ’எம்.ஆர்.பி.எண்டெர்டெய்ன்மெண்ட்’ பசிலியான் நசரேத், மகேஷ்ராஜ் பசிலியான் தயாரிப்பில், செளந்தர்யா ரஜினிகாந்தின் ‘ஜியோன் ஃபிலிம்ஸ்’ இணைத் தயாரிப்பில் உருவாகும் புதுப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா சென்னையில் நடந்தது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’யின் டைரக்டர் அபிஷன் ஜீவிந் இப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரியாகிறார். ஹீரோயினாக மலையாள சினிமாவில் புகழ்பெற்ற அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.
படத்தின் பூஜையில் சசிக்குமார், சிம்ரன், ஆர்.ஜே.பாலாஜி, டைரக்டர்கள் ரஞ்சித் ஜெயக்கொடி, பிரபுராம் வியாஸ், தொகுப்பாளினி டி.டி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய மதன் கதை-திரைக்கதை எழுதி இயக்குனராகிறார். ஒளிப்பதிவு : ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் ; சுரேஷ்குமார், ஆர்ட் டைரக்டர் ; ராஜ்கமல், காஸ்ட்யூம் ; ப்ரியா ரவி, பி.ஆர்.ஓ ; யுவராஜ்.
— மதுரை மாறன்