அங்குசம் சேனலில் இணைய

குறிவைக்கப்பட்ட பாமக பிரமுகர் … பத்தாண்டு கால பகை … பின்னணி என்ன ?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரும், பாமக மாவட்டச் செயலாளருமான மக ஸ்டாலினை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கொலை முயற்சி சம்பவத்தின் பின்னணியில் பத்தாண்டுகால பகை இருந்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நேற்று காலை காரில் வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல், பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். தொடர்ந்து அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பேரூராட்சி மன்ற தலைவரும், பாமக மாவட்ட செயலாளருமான மக ஸ்டாலினை அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பாமக பிரமுகர் மக ஸ்டாலின்
பாமக பிரமுகர் மக ஸ்டாலின்

அந்த கும்பலை அங்கிருந்த அவரது ஆதரவாளர்களான இளையராஜா மற்றும் அருண் ஆகியோர் தடுத்துள்ளனர். அவர்களை அந்த கும்பல் வெட்டியுள்ளது. இதனை கண்டு மக ஸ்டாலின் அலுவலகத்தின் கழிவறைக்குள் சென்று தற்காத்துக் கொண்டார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆடுதுறை பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நாட்டு வெடி குண்டு வீசி பேரூராட்சி மன்ற தலைவரை கொலை செய்ய முயன்ற சம்பவத்தால்  அப்பகுதி முழுவதுமே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதில் இளையராஜா, அருண் ஆகிய இருவருக்கு வெட்டுக்காயம் அடைந்த தகவல் அறிந்து மக ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர்.

வெடிகுண்டு தாக்குதல்பதற்றமான சூழல் காரணமாக ஆடுதுறை பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. நாட்டு வெடி குண்டு வீசி சென்ற மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பேரூராட்சி மன்ற தலைவர் மக ஸ்டாலின் ஆதரவாளர்கள் சாலையில் டயர்களை கொளுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆடுதுறை பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. இதையடுத்து ஆடுதுறை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பனாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

வெடிகுண்டு தாக்குதல்இந்நிலையில் அந்த மர்ம நபர்கள் சென்ற கார் விழுப்புரம் பாண்டிச்சேரி எல்லை அருகே போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு துரத்தி செல்லப்பட்டதாகவும் துரத்தலின் போது காரை சாலையின் ஓரமாக பாண்டிச்சேரி எல்லை அருகே ராகவன் பேட்டை என்ற இடத்தில் நிறுத்திவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது அந்த காரை கைப்பற்றி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் முதற்கட்ட விசாரணயில், பேரூராட்சி அலுவலகத்திற்கு சஃபாரி காரில் எட்டு பேர்  கொண்ட கும்பல் வந்துள்ளனர். அதில் ஏழு பேர் முகமூடி அணிந்து கொண்டு காரில் இருந்து வேகமாக இறங்கி சென்று 4 நாட்டு வெடி குண்டுகளை அலுவலகத்திற்குள் சரமாரியாக வீசி உள்ளனர். அதில் இரண்டு குண்டுகள் வெடித்து சிதறி உள்ளது. தொடர்ந்து அலுவலகத்திற்குள் நுழைந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பேரூராட்சி மன்ற தலைவர் ம.க. ஸ்டாலினை வெட்டுவதற்காக சென்றுள்ளனர். அவர்களை மக ஸ்டாலின் கார் ஓட்டுநர் இளையராஜா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருண் ஆகியோர் தடுத்துள்ளனர்.

இதனைக் கண்டு மக ஸ்டாலின் அங்கிருந்து தப்பி கழிவறைக்குள் சென்று மறைந்து கொண்டார். இதையடுத்து அந்த கும்பல் இளையராஜா மற்றும் அருண் ஆகியோரை வெட்டிவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. கார் நம்பரை வைத்து ஆய்வு செய்ததில் அதே காஞ்சிபுரத்தில் வாங்கப்பட்ட கார் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் திருவிடைமருதூரைச் சேர்ந்த மூன்று பேர் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆட்கள் என எட்டு பேர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதல்இந்நிலையில் ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் ம.க ஸ்டாலினை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, அவர் மீது யாரெல்லாம் முன் விரோதத்தில் இருக்கின்றனர். என்ற பட்டியலை மக ஸ்டாலினிடம் பெற்று, அந்தப் பட்டியலில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அதன்படி திருவிடைமருதூர் சுக்கிர வார கட்டளை தெருவை சேர்ந்த மகேஷ் 42 என்ற ரவுடியை போலீசார் இச்சம்பவம் தொடர்பாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மக ஸ்டாலின் தம்பி மக ராஜாவை கொலை செய்த லாலி மணிகண்டனின் உறவினராவார்.

பாமக மாவட்ட செயலாளர் மக ஸ்டாலின் இந்த கொலை முயற்சி சம்பவத்தின் பின்னணியில் 10 ஆண்டுகால பகை இருந்து வருகிறது.

வெடிகுண்டு தாக்குதல்அதில், கடந்த 2015 ஆம் ஆண்டு மா கா ஸ்டாலின் வன்னியர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார் இவருடைய தம்பி ராஜா உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஊர் திருவிழாவிற்கு வந்த ராஜாவை ஒரு கும்பல் தேப்பெருமாநல்லூர் என்ற இடத்தில் வைத்து துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றனர். இந்த கொலையை லாலி மணிகண்டன் என்ற ரவுடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கப்பதிவு செய்த போலீசார் லாலி மணிகண்டன் மற்றும் அவருடைய ஆட்களை கைது செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த நான்கு மாதத்தில் லாலி மணிகண்டன் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

கோவை சிந்தாமணி   சிக்னலில் கார் நின்றபோது சுற்றி வளைத்த ஒரு மர்ம கும்பல் கார் டிரைவர் ரவியை துப்பாக்கியால் சுட்டு நிலைகுலைய செய்தனர். இதை பார்த்த மணிகண்டன் தப்பி ஓட்டம் பிடித்தார். ஆனால் லாலி மணிகண்டனின் சகோதரர் மாதவன் நண்பர்கள் அருண், தியாகு ஆகியோர் 3 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

வழக்கறிஞர் ராஜாவின் நண்பர் என கூறப்படும் பிரபல கூலிப்படை தலைவன் திண்டுக்கல் மோகன்ராமின் ஆட்கள் இந்த கொலைகளை செய்ததாக கோவை போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் மக ஸ்டாலின், திண்டுக்கல் மோகன்ராம் உள்ளிட்டோரை கோவை நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் ம.க ஸ்டாலினை கொள்ள சதித்திட்டம் திட்டியதாக குறி போலீசார் லாலி மணிகண்டனையும், வெங்கட்ராமன் என்பவரையும் கைது செய்தனர்.

இந்த வெங்கட்ராமன் பாமக மாநிலத் துணைத் தலைவராக இருந்தவர். இவருக்கும் ம.க ஸ்டாலினுக்கும் அதிகாரமோதல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பகையும் வழக்கறிஞர் ராஜாவின் கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. ஒரே கட்சியில் இருந்தாலும் இருவரும் எதிர் எதிர் திசையில் பகைவர்களாக இருந்து வந்துள்ளனர்.

Anbumani meets Ramadossஇந்த நிலையில் தான் பாமக ராமதாஸ், அன்புமணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்தனர். அப்போது மாவட்ட செயலாளர் பதவியை அன்புமணி வெங்கட்ராமனுக்கு கொடுத்திருக்கிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் ராமதாஸ் ம.க ஸ்டாலினை அதே பகுதிக்கு மாவட்ட செயலாளராக நியமித்தார்.

இதன் பிறகு மக ஸ்டாலின் பூம்புகாரில் மிகப் பிரமாண்டமாக மகளிர் மாநாட்டை நடத்தி பாமகவில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி சமீபத்தில் ராமதாஸ்  தன்னுடைய மகள் காந்திமதி கட்சியில் இணைத்து பாமக நிர்வாக குழு உறுப்பினர் பதவியையும் வழங்கினார்.

இதையடுத்து மக ஸ்டாலின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாக குழு உறுப்பினர் காந்திமதியை வைத்து கும்பகோணத்தில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இப்படி அடுத்தடுத்து பாமக தலைமையின் நம்பிக்கை கூறியவராக மக ஸ்டாலின் மாறி வருகிறார்.

இந்நிலையில் மக ஸ்டாலினை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவத்தின் பின்னணியில் பத்தாண்டு கால பகை உள்ளதா அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியதா என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.