அங்குசம் சேனலில் இணைய

செயின்ட் ஜோசப் கல்லூரியில் பல்லுயிர் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம் !

பள்ளி மாணவா்களுக்கான பல்லுயிர் சூழல் பாதுகாப்பு பற்றி கருத்தரங்கம்

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக ஆரோக்கிய சாமி அறக்கட்டளை பல்லுயிர் சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் அளுந்தூர் புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் அருட்சகோ எட்வர்டு செபாஸ்டின் தலைமை வகித்தார்.

பல்லுயிர் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவி செல்வி மெர்சி ஞானம் மண்வளம் சிறக்க என்ற தலைப்பில் பேசினார். விரிவாக்கத்துறை இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச மாணவர்கள் தாங்கள் வீடுகளின் அருகில் மரக்கன்றுகளை நட்டு உங்கள் கிராமங்களை பசுமை கிராமமாக மாற்ற வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பல்லுயிர் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்பசுமை உயிரின பன்மை சரணாலயம் நிறுவனர் அலெக்ஸாண்டர் தட்பவெப்ப நிலை மாற்றம் வரம்பு மீறிய பல்லுயிர் தன்மைப் பயன்பாடு அழிந்து கொண்டிருக்கும் தாவரங்கள் உயிரினங்கள் இயற்கை பேரழிவு பற்றி ஒளிப்படக்காட்சியை கொண்டு சிறப்புரையாற்றினார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியின்  தலைமையாசிரியர் ஜோசப் செல்வராஜ்  ஆகியோர் முன்னிலை வகித்தார். விரிவாக்கத்துறை முதுநிலை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசந்திரன் இன்றைய காலநிலை மாற்றங்களை பற்றியும் அவசரநிலை பற்றியும் தொடக்கவுரையாற்றினார் மற்றும் லெனின் முனைவர் ஆரோக்கியசாமி பற்றியும் இக்கருத்தரங்கை பற்றியம் திட்ட விளக்கவுரையாற்றினார்.

பல்லுயிர் சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்கடந்த  மூன்று நாட்கள் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒவியப்போட்டி, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கும் பங்கு பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மூலிகை தோட்டங்கள் அமைத்தல், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுபுறச்சூழல் கண்காட்சி ஆவணப்படங்கள் ஆகியவை இடம் பெற்றன.

முன்னதாக இளநிலை ஒருங்கிணைப்பாளர் ஜோசப் கிறஸ்து ராஜா வந்தவர்களை வரவேற்றார். முடிவில் பட்டதாரி தமிழாசிரியர் லாரன்ஸ் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் சுதாகர் பணியமர்வு இரண்டின் மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.