கல்விக்கண் திறக்கும் ஆசிரியர்களை கௌரவித்த ரோட்டரி கிளப் – திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை !
திருச்சியில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் உடன் இணைந்து திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி ராயல், ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளைஸ், டைமண்ட் சிட்டி குயின்ஸ், ரோட்டரி கிளப் டைமண்ட் சிட்டி எ லைட், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி ரிவர் டவுன், ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ஐ டொனேஷன் ரோட்டரி கிளப் திருச்சி தென்றல் ரோட்டரி கிளப் திருச்சி வின்னர்ஸ் ஆகிய சங்கங்கள் இணைந்து ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளி, அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி , கலை அறிவியல் கல்லூரி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட்ட பிரிவுகளில் இருந்து 26 சிறந்த ஆசிரியருக்கான உயரிய விருதை வழங்கியது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக ரோட்டரி கிளப் திருச்சி நெக்ஸ்ட் ஜென் தலைவர் ரோட்டேரியன் அப்துல் ரஹீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த நாளின் முக்கியத்துவத்தை குறித்து ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி தலைவர் ரொட்டேரியன் ஜோசப் ராஜ் அவர்கள் உரையாற்றினார்.
இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஜோசப் கண் மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி ரொட்டேரியன் சுபா பிரபு கலந்து கொண்டு பேசும்போது ஆசிரியர்கள் பற்றியும் அவர்கள் ஆற்றி வரும் உன்னத சேவைகள் பற்றியும் இன்றைய சூழலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் மாணவர்களிடையே ஆசிரியரின் உறவுகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்து ஆசிரியர்களை பாராட்டினார்.
சிறப்பு விருந்தினராக ரோட்டரி வருங்கால கவர்னர் ரொட்டேரியன் லியோ பெலிக்ஸ் கலந்து கொண்டு பேசும் போது இன்றைய ஆசிரியர்களின் சாதனைகள் மற்றும் மாணவர்களுக்கு எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் ஆசிரியர் துறையில் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் பற்றியும் மாணவர்களிடையே கலந்தாய்வு குறித்து விளக்கமாக கூறி ஆசிரியர்களை பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் 26 ஆசிரியர்களுக்கு பதக்கமும் பட்டையமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களும் அனைத்து சங்க உறுப்பினர்களும் வெகுவாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
— இரா.சந்திரமோகன்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.