ஆறு கி.மீ தூரம் … ஆறு மணி நேரம் … ஆயிரம் செஞ்சும் ”அது” மிஸ்ஸிங் ஆச்சே அண்ணா ?
நம்ம விஜய் அண்ணா வணக்கம்ண்ணா… சமீபத்துல திருச்சியில 13.௦9.2௦25 சனிக்கிழமை அன்னைக்கி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரா நீங்க நடத்துன அந்த பரப்புரையானது தமிழ்நாடு பூராவுமா ரொம்பவே பரபரப்பாகிப் போச்சுண்ணா.
அது சரிங்கண்ணா, மரக்கடையில பரப்புரை பேசுறதுக்கு அனுமதி வாங்கிட்டு, திருச்சி ஏர்போர்ட்லருந்து மரக்கடை அந்தப் பாயிண்ட்டுக்கு நீங்க வந்து சேர்றதுக்கு ஏன்ணா அம்பூட்டு நேரமாச்சு? சென்னையிலேந்து சொகுசா அதுவும் தனி விமானத்துல திருச்சி ஏர்போர்ட்ல வந்து எறங்குறீங்க. அது உங்களோட தனிப்பட்ட சௌகர்யம் அத்த வுட்டுடுங்க.
ஏர்போர்ட்ல உங்கள உடனே பாக்குனும்ங்கற ஆர்வத்துல தொண்டர்கள் பெரும்பாலரும் ஏர்போர்ட்டு உள்ளார பேரிகாடு தடைகளைக் கீழே தள்ளிட்டு அதும் மேலேறி கும்பலா ஓடி வந்தாங்க பாருங்க. அசல் சினிமா மாதிரியே இருந்துச்சுங்க. இதெல்லாம் ரொம்ப ராங் அண்ணான்னு நாம சொல்லுறதா வேணாமா?. அப்பிடி என்ன தான் இருந்தாலும் இதெல்லாம் சரி தானுங்களா அண்ணா?
திருச்சி ஏர்போர்ட்லேந்து மரக்கடை ஏரியா ஆறு கிலோ மீட்டர் தூரம் தானுங்கோ. உங்களுக்கு இதைக் கடந்து வர்றதுக்கு ஆறு மணி நேரம் ஆகிப் போச்சுங்க. அதனால ஒன்னும் மோசமில்லீங்க. ஆனாக்கவும் இந்த மொத்தம் ஆறு கிலோ மீட்டர் தூரத்தை யாரோ ஒரு ஆளு மெதுவா நடந்து நடந்து வந்தாலும் ஒண்ணரை மணி நேரத்துல மரக்கடைக்கு வந்து சேந்துடலாம்ங்க.
சரி. மரக்கடைக்கு வந்தது தான் வந்து சேந்தீங்க. அந்த அதி நவீன வாகனத்துல தானியங்கி (லிப்ட்) தூக்கித் தூக்கியால மேலேறி வந்து எல்லார்க்கும் தரிசனம் தந்திங்க பாருங்க. மண்ணைப் பிளந்து விண்ணுக்கு ஏவிய வேத குமாரனோ தேவ குமாரனோ போல இருந்துச்சுங்க. சரி. டாப்புல தளத்துக்கு வந்ததுக்கு அப்புறமா கை மைக் ஒண்ணு புடிச்சிங்க பாருங்க. அந்த வெயில்லயும் எரிமலையொன்னு வெடிக்கப் போவுதுனு எல்லாரும் எதிர்பார்த்து நின்னுட்டு இருந்தாங்க. கை மைக் ஆனது மக்கர் பண்ணிடுச்சு. அந்த அதி நவீனப் பேருந்து உத்தேசமா பத்து கோடி ரூபாய்ல உருவானதுன்னு சொல்லிக்கிறாங்க. எத்தனை கோடி ரூபாய் செலவானா என்னங்க? பொது வெளியில பரப்புரைன்னு பேச வந்துட்டா அதுக்கு மைக்கு தானுங்களே ரொம்ப முக்கியம்?
அதுல பாருங்க. மாநிலத்துல ஆளுற திமுகவையும் நல்லா வாரு வாருனு வாரி வுடுறீங்க. மத்தியில ஆளுற பிஜேபியும் ஒரு வாரு வாரி விடுறீங்க. எல்லாமே கேக்குறதுக்கு நல்லா இருக்குங்க. உங்க தமிழக வெற்றிக் கழகத்தோட கொள்கை லட்சியம் கோட்பாடு செயல்பாடுனு எதையாவது சுருக்கமா சொன்னிங்கனா இந்த ஜனங்களுக்கு புரிஞ்சிக்க முடியும்ங்க.
சரி. நாம திருச்சிக்கு வந்து விடுவோம். இங்கன் மாநகரக் கட்டமைப்புல இருபதடி முப்பதடி அகலத்துக்கும் மேலே ரோடு வசதி இல்லீங்க. இதுல நீங்க சொகுசா அதி நவீன வாகனத்து உள்ளார உக்காந்திட்டு, எல்லாரையும் வெயில்ல காய வுட்டு ஆறு மணி நேரமா ஊந்து ஊந்து வந்திங்கனா, அந்த ரோடு சைடு கடைக்காரங்க வீடுகளோட குடியிருப்பு வாசிகள் என்னாங்க ஆவுறது?
கொஞ்சம் யோசிங்க விஜய் அண்ணா.
இனிமே நீங்க எந்த ஊர்ல பரப்புரை பண்ணினாலும், நீங்க சென்னைலேந்து ஹெலிகாப்டர் ஏறி உக்காந்தி அந்த ஊருக்கு வந்து சேருங்க. பரப்புரை பண்ணுற எடத்துல பிரமாண்டமான பந்தல் போடச் சொல்லுங்க. உங்களைக் காண வர்றவங்க வெயில்ல காயணுமா என்ன? பரப்புரை பண்ணுற எடத்துக்கு பக்கத்துல, உங்க ஹெலிகாப்டர் எறங்குறத்துக்கு வசதியாக ஹெலி பேடு தளம் போடச் சொல்லிடுங்க.
பழையன கழிதலும் புதியன புகுதலும் தவிர்க்க முடியாது. யாராலும் தடுக்கவும் முடியாது நம்ம விஜய் அண்ணா.
ஒரு சினிமாவுல ஒரு டூயட் சாங்குல ஹீரோயின்ட்ட நீங்க பாடுவீங்க. எனக்குப் பிடிச்சதெல்லாம் உனக்கும் பிடிக்கும் என்பாய்னு ஒவ்வொன்னா சொல்லி வருவீங்க. கடைசியா எனக்குப் பிடிச்சதெல்லாம் உனக்கும் பிடிக்கும்ங்குறே… என்னை ஏன் பிடிக்காதுங்குறேனு அந்த சாங் முடிஞ்சிடும். அதுபோல, விஜய் அண்ணா உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் மக்களுக்குப் பிடிச்சிப் போயிக் கட்டக் கடேசியா உங்களை மட்டும் பிடிக்காமப் போயிடப் போவுது அதெப் பாத்துக்கங்க விஜய் அண்ணா.
— ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
Comments are closed, but trackbacks and pingbacks are open.