காலேஜ் போக பஸ் இல்லை … காலேஜ் போனா குடிக்க தண்ணி இல்லை … கழிவறை வசதி இல்லை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டம் காஜாமலை பகுதியில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலும் இங்கு படிக்கும் மாணவர்கள் கிராமப்புறம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே.

ஆனால், இந்த கல்லூரிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு போதுமான பேருந்து வசதி இல்லை. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மாற்றப்பட்டதன் பின்னர் மாணவர்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படுவதில்லை. தனியார் பேருந்துகளும் இந்தக் கல்லூரி பகுதியைச் சரியாக சென்றடைவதில்லை. இதனால் மாணவர்கள் கல்லூரி நேரங்களில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிமேலும், கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லை. குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. கழிவறைகள் கூட சுத்தம் செய்யப்படாமல், மோசமான நிலையில் காணப்படுகின்றன.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதனை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்லூரி நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளர் சுதேசனா தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜி. கே. மோகன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்த்தி, அன்பு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, போக்குவரத்து வசதியினை அதிகரிக்கவும், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை உடனடியாக மேம்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

 

  —   இந்திய மாணவர் சங்கம், திருச்சி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.