முதல்வர் எடப்பாடி வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற அ.தி.மு.க. கிளைச் செயலாளர் !
முதல்வர் எடப்பாடி வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற அ.தி.மு.க. கிளைச் செயலாளர் !
திருச்சி மாவட்டம் .மணப்பாறை ஒன்றியம் – செட்டியப்பட்டி அ.தி.மு.க. கிளைச் செயலாளர் சின்னச்சாமி. இவர், தனது மனைவி மற்றும் உறவினர் ஒருவருக்கு கூட்டுறவுத் துறையில் வேலை வாங்கி தரக் கோரி 8 லட்சம் ரூபாய் முன்னாள் எம்.எல்.ஏ. பூவை செழியனிடம் கொடுத்துள்ளார். வேலை வாங்கி தராமலும், பணத்தையும் தராமலும், பூவை – செழியன் ஏமாற்றியுள்ளார்.
இதனால், மன வேதனையடைந்த சின்னச்சாமி, 31.10.2020 இன்று காலை முதல்வரை சந்திக்க முயன்று, தோல்வியடைந்ததால், கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள தமிழக முதல்வர் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்ற சின்னச்சாமியை முதல்வர் பாதுகாப்பு படையினர் தடுத்து பட்டினபாக்கம் காவல்நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.