‘ஃபோர்த் ஃப்ளோர்’ல என்ன நடக்குது?

‘மனோ கிரியேஷன்ஸ்’ பேனரில் ஏ.ராஜா தயாரித்து எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கியிருக்கும் படம் ‘ஃபோர்த் ஃப்ளோர்’. இதில் ஹீரோவாக ஆரி அருஜுனன், ஹீரோயினாக தீப்ஷிகா நடிக்கின்றனர்.  மற்ற கேரக்டர்களில் டைரக்டர் சுப்பிரமணிய சிவா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் ஒளிப்பதிவு : ஜே.லக்‌ஷ்மண், இசை : தரண், எடிட்டிங் : ராம் சுதர்ஷன், ஆர்ட் டைரக்டர் : சுரேஷ் கல்லேரி, நடனம் : அபு சால்ஸ், ஸ்டண்ட் : டேஞ்சர்ர் மணி, நிர்வாகத் தயாரிப்பாளர் : பி.சூரியபிரகாஷ், பி.ஆர்.ஓ : ஏ.ராஜா. தமிழ்நாடு ரிலீஸ் : செவன்த் ஸ்டுடியோ கே.கண்ணன்.

4th floor சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஃபோர்த் ஃப்ளோரில் நடக்கும் திகில் சம்பங்களை சைக்காலஜிகல் த்ரில்லர் ஜானரில் படமாக்கியுள்ளார் டைரக்டர் எல்.ஆர்.சுந்தரபாண்டி. ‘ஃபோர்த் ஃப்ளோர்’-ன் ஷூட்டிங் முழுமையாக முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ”பிப்ரவரி முதல் வாரத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் பிப்ரவரி இறுதியில் பட ரிலீசும் இருக்கும்” என்கிறார் தயாரிப்பாளர் ஏ.ராஜா.

—     ஜெடிஆர்

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.