அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ரெண்டு வருஷமா ஒன்னுமே நடக்கல … போராட்ட அறிவிப்பால் பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் !

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சோமரசம்பேட்டையில்   கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாத காவலர் ஓய்வு அறையை, கழிவறை, குடிநீர், மின்சார வசதி ஆகியவை ஏற்படுத்தி, உடனடியாக திறக்க வேண்டியும், உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் குப்பை கொட்டுவதை தடை செய்து, நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டியும் தொடர் உண்ணாவிரத போராட்டம்  நாளை 30.01.2026 நடக்கவிருந்த நிலையில், மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO), தலைமையில் சோமரசம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீசன், நாச்சி குறிச்சி ஊராட்சி செயலர் ஆனந்த் முன்னிலையில், சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார், மாவட்ட செயலாளர் அப்துல் அஜீஸ், ஒன்றிய செயலாளர் சண்முகம், இளைஞர் அணி அமைப்பாளர்  கௌதம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சோமரசம்பேட்டைஒரு மாத காலத்திற்குள் நமது கோரிக்கைகளை நிறைவேற்றி, ஓய்வறையின் சாவியை சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர்களிடத்தில் ஒப்படைக்கிறோம் என்று உறுதி அளித்து, எழுதிக் கொடுத்துள்ளார்கள். அதுபோல  உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் உள்ள குப்பையை அப்புறப்படுத்துவதாக உறுதியளித்துள்ளார்கள். எனவே நாளை நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.. கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் மீண்டும்  போராட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளோம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.