கவிதைச் சாரல் சங்கம் ஆறாம் ஆண்டு விழா !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சென்னை பட்டாபிராம் – கே.கே.ஆர் மஹாலில் கவிதைச் சாரல் சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழா மேடையில் குழும நிறுவனர் கவிஞர் பேச்சியம்மாள் தொகுத்த நாற்றிசையும் நற்றமிழும் என்கிற தன்முனைக் கவிதை நூலினை தன்முனைக் கவிதைகளின் தந்தை கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள் வெளியிட தன்முனைக் குழும செயல் தலைவர் கவிஞர் ந.வேலாயுதம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.  நூலினை வெளியிட்டு முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்கள் நிறுவுனர் பேச்சியம்மாள் அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பாராட்டிப் பேசினார்.

விழா மேடையில்குழும நிறுவனர் பேச்சியம்மாள்,  கவிஞர்கள் தனராஜ் பாப்பணன் , சின்ன இளங்கோ, அன்புச்செல்வி, தங்கத்தமிழ் வளையாபதி, ஜெ.விஜயன், யாதுமறியான், எஸ்.பூர்ணேஸ்வரி, செல்வநாயகி  மற்றும் பலர் உள்ளனர். தொகுப்பு நூலில் 25 கவிஞர்களின் தன்முனைக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கவிதைச் சாரல்  ஆண்டு விழாகவிதைகளைத் தேர்வுசெய்து முனைப்புடன் தொகுப்பில் உதவிய கவிஞர் ந.வேலாயுதம் அவர்களுக்கு பாராட்டும் விருதும் மேடையில் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற கவிதைச் சாரல் சங்க ஆண்டு விழாவில் 40 க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. விழாவில் சொல்லின் செல்வர் ஆவடி குமார், பேச்சாளர்கள் விக்டர்தாஸ், வெற்றிப்பேரொளி , ஈழவேங்கை தம்பி மற்றும் கவிஞர்கள் கா.கணேசன், இராசகுமாரன்,தமிழன் திருவண்ணாமலை,செந்துறை மதியழகன் ,சிரா செல்வகுமார்,மறுமலர்ச்சி பாலகுருசாமி, பஞ்சநாதன் சின்னா, அனுராதா சௌரிராஜன், அசோகன், சுப்புராஜூ , செல்வநாயகி, இரா.சாந்தி, இந்திராணி,சாந்தி பிரபு,ஐயப்பன்,  மற்றும் பல தமிழ் ஆளுமைகள், கவிஞர்கள் கலந்து கொண்டனர்.

கவிதைச் சாரல் விழாக் குழுவினர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.