IAS சகாயத்தின் சொந்த மாவட்டத்திலே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதா………!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

IAS சகாயத்தின் சொந்த மாவட்டத்திலே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதா………!

மக்கள் பாதை அமைப்பிற்குள் நடைபெற்று வரும் பல சிக்கல்களையும், அதில் நடக்கும் முறைகேடுகளையும்,  அங்குசம் இணையத்தில்  தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே வருகிறோம். இதற்கு இடையில் மக்கள் பாதை அமைப்பின் தலைவர் நாகல்சாமி IAS வழிக்காட்டியான IAS சகாயம் குறித்து குற்றச்சாட்டு பரபரப்பாக வெளியாகி கொண்டு இருக்கும் நிலையில்

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

பாதிக்கப்பட்ட மாணவி சத்தியாவுடன் மக்கள் பாதை அமைப்பினர்.

மக்கள் பாதையின் வழிகாட்டி IAS சகாயத்தின் சொந்த மாவட்டத்திலே பாதிக்கப்பட்ட மாணவிக்கு சேர வேண்டிய நிவாரண தொகையை தற்போது வரை கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பது தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

புதுக்கோட்டை மாவட்டம் , பெருங்களூர் ஊராட்சி போரோம் கிராமத்தில்  ஏழை மாணவி சத்யா, மனநலம் குன்றிய  தாயுடன் காட்டு பகுதியில் கதவு இல்லாத வீட்டில்  வசித்து வந்ததை  அறிந்த மக்கள் பாதை பேரியக்கத்தினர் உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்து,  பாதுகாப்பான வீட்டிற்கும், தாயின் மனநல சிகிச்சைக்கும், மாணவி சத்தியாவின்  கல்லூரி மேல்படிப்புக்கான  செலவையும் ஏற்பதாக உறுதியளித்தனர்.

அதன் முதற்கட்டமாக  வீடு கட்டுவதற்கான பணிகளை செய்து வந்த நிலையில்  இதை சமூக வலைதளத்தில் பார்த்த புலனாய்வு பத்திரிக்கை செய்தியாளர் பேரியக்கத்தினருடன்  பேசியுள்ளார். இது அந்த பத்திரிக்கையிலும் இச்செய்தியை வெளியிட்டுள்ளனர்.

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

புதுக்கோட்டை மக்கள் பாதை அமைப்பின் தொடர் முயற்சியால் மாவட்ட ஆட்சியரின் மூலம் இலவச வீட்டுமனை  பட்டா மற்றும்  அதில் வீடு கட்டுவதற்க்கான  பிரதமர் வீடு திட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

 

மாணவியின்  கல்வி செலவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  ஏற்று கொண்டார். மேலும் மாவட்ட மனநல மருத்துவ இயக்குநர்  மாணவியின் தாயாருக்கு  சிகிச்சைக்காக  , மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையும் மாற்று திறனாளிக்கான ரூ.1500/- சிறப்பு மாத நிதியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இவை  அனைத்திற்க்கும் மக்கள் பாதை புதுக்கோட்டை மாவட்டத்தினர்  முழு வீச்சில் ஈடுபடுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக மாநில வள்ளலார் உணவகத்திற்கான வங்கி கணக்கை பொருளாளர் மற்றும் நிதிப் பொறுப்பாளர்  வழிகாட்டுதலில், சமூக வலைதளங்கள் வாயிலாக உதவும் உள்ளங்களிடையே கொடுக்கப்பட்டு……… அதன் மூலம் அவ்வங்கிக் கணக்கிற்கு உதவியாளர்கள் உதவித் தொகையாக  39,500/- ரூபாய் அணுப்பியுள்ளனர்.

ஓரிரு நாட்கள் கழித்து மக்கள் பாதை நிதி பொறுப்பாளர் இந்த வங்கி கணக்கை தொடர்ந்து கொடுக்க வேண்டாம் என்று சொல்லி,  மாணவி சத்தியாவின் வங்கி கணக்கை உதவி செய்பவர்களுக்கு நேரிடையாக  கொடுத்திருக்கிறார்கள் மாவட்ட மக்கள் பாதையினர். அதன் பிறகு  இரண்டு லட்சத்திற்க்கும் மேலான மாணவி சத்தியாவின் வங்கிக் கணக்கிற்கு சென்றுள்ளது.

தற்போது வீடு கட்டும் பணி நடைபெற இருப்பதால் புதுக்கோட்டை மக்கள் பாதை பொறுப்பாளர் மாநில நிர்வாகத்திடம் மாநில வள்ளலார் வாங்கி கணக்கில்  மட்டுமே வந்துசேர்ந்த   ரூ.39,500/- தொகையை மக்கள்பாதை புதுக்கோட்டை மாவட்ட வங்கி கணக்கிற்க்கு மாற்றம் செய்யாதல் அந்த மாணவிக்கு கொடுத்து உதவலாம் என்று  மக்கள் பாதை  அமைப்பின் மாநில பொருளாளர் மற்றும் நிதிப் பொறுப்பாளரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தும், கடிதம் வாயிலாகவும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்

ஆனால் இதுவரை  அத்தொதை மாவட்டத்திற்கும் அனுப்பிவைக்கப்படவில்லை. மாணவிக்காக வந்த பணம் அவர்களிடம்  செல்லவில்லை என்பது தான் தற்போதைய அதிர்ச்சியான செய்தி.

மக்கள் பாதையின் வழிகாட்டியான IAS சகாயத்தின்  சொந்த மாவட்டத்திலே இப்படி ஒரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளனர் பொருளாளர் மற்றும் நிதிப் பொறுப்பாளர்.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.