அமைச்சர் துரைக்கண்ணுவின் ‘பவர் சென்டராக’ செயல்பட்ட அமமுக வழக்கறிஞர் !

0

அமைச்சர் துரைக்கண்ணுவின் ‘பவர் சென்டராக’ செயல்பட்ட அமமுக வழக்கறிஞர் !

 

அமைச்சர் துரைக்கண்ணு அதிமுக அரசில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தபோதிலும், அவரைச் சுற்றி அமமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே ‘பவர் சென்டர்’களாக வலம் வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

வழக்கறிஞர் சுரேஷ்

அமைச்சரின் மறைவைத் தொடர்ந்து, அமைச்சருக்கு நெருக்கமாக இருந்த மணஞ்சேரி நடுவக்கரையைச் சேர்ந்த பெரியவர் (எ) முருகன் (42), மணஞ்சேரியைச் சேர்ந்த ஐயர் (எ) சக்திவேல் (32), கும்பகோணம் மாதுளம்பேட்டை தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்; (46), கும்பகோணம் சத்யா நகரைச் சேர்ந்த வேதா (எ) வேதா செல்வம் (47), கும்பகோணம் எஸ்பிஐ காலனியைச் சேர்ந்த என்.கே.டி பாலகுரு(52) ஆகிய 5 பேரை அதிரடியாக போலீஸார் கைது செய்துள்ளனர்.

நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தல் செலவுக்காக அதிமுக கட்சி தலைமை சார்பில் கொடுக்கப்பட்ட பணத்தை இக்கும்பல் ‘ஆட்டைய’ப் போட்டதுதான் இந்த திடீர் கைதுக்கு காரணம் என்கின்றனர் இதுபற்றிய முழு விபரம் அறிந்தவர்கள்.

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கென அமைச்சர் துரைக்கண்ணுவிடம் அதிமுக தலைமை ரூ200 கோடி கொடுத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அப் பணத்தை கட்சி தலைமை திருப்பி கேட்டபோது, அதைத் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர் அமைச்சர் தரப்பில்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் துரைக்கண்ணுவின் மகனை தூக்கிச் சென்று மிரட்டியதைத் தொடர்;ந்து ரூ120 கோடியை திருப்பி தந்ததாக சொல்லப்படுகிறது. மீதி ரூ80 கோடி செலவாகிவிட்டதாக அமைச்சர் துரைக்கண்ணு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால்தான், அமைச்சர் இறந்தவுடனேயே அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போர்வையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சென்னையில் மருத்துவமனைக்குச் சென்று அமைச்சரின் உறவினர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியனார். அப்போது அமைச்சர் தரப்பில் ஒரு தொகை திருப்பித் தரப்பட்டுள்ளது என்கின்றனர் இதுபற்றிய விபரமறிந்தோர்.

இதுகுறித்து கட்சி தலைமை கடுமையான முறையில் விசாரணை செய்தபோது, ரூ80 கோடியை 46 பேரிடம் பணம் கொடுத்துள்ளதாக அமைச்சர் துரைக்கண்ணு தரப்பில் ஒரு லிஸ்ட் கொடுத்துள்ளனர். அந்த லிஸ்டில் முதலிடம் வகித்த பெயர்கள் பெரியவர் என்கிற முருகன் மற்றும் கும்பகோணம் மாதுளம்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ். இதில் கொடுமை என்னவெனில், பெரியவர் (எ) முருகன் அடிப்படையில் பாமகவைச் சேர்ந்தவர்.

வழக்கறிஞர் சுரேஷ் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) வழக்கறிஞர் அணியில் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ஆவார்.

அமமுகவில் மாவட்ட அளவில் கட்சி பொறுப்பில் இருந்துகொண்டே அதிமுக அமைச்சருக்கு நெருக்கமாக அவரது பணத்தை கையாளும் அளவுக்கு வழக்கறிஞர் சுரேஷ் செயல்பட்டு வந்துள்ளார். இது எவ்வளவு வடிகட்டின அயோக்கியத்தனம? என்கின்றனர் இதுபற்றிய விபரமறிந்தோர்.

பெரியவர் என்கிற முருகன்

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு (ஸ்பெஷல் பிராஞ்ச்) இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த மகாதேவன் என்வர் கும்பகோணத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஓராண்டுக்கு முன்பு பணிபுரிந்தபோது, அவருக்கும் வழக்கறிஞர் சுரேஷ{க்கும் மிக மிக நெருக்கம். இருவரும் கூட்டணி அமைத்து வழக்கு தொடர்பாக புகார் அளிக்க வருபவர்களை கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி பல பல லட்சம் சம்பாதித்ததாக பாதிக்கப்பட்டவரகள்; அப்போதைய தஞ்சை சரக போலீஸ் டிஐஜியிடம் மனு அளித்தனர். குற்றச்சாட்டுக்கு ஆளான இன்ஸ்பெக்டர் மகாதேவன் மீது விசாரணை நடத்தி அவரை தண்டிப்பதற்கு பதிலாக அவரை எஸ்.பி;. தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமித்தனர் அப்போதைய காவல்துறை அதிகாரிகள். (தற்போது மகாதேவன் பணி உயர்வு பெற்று நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் டிஎஸ்பி-யாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.)

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.