அமைச்சர் மரணமும் – பெரியவர் (எ) முருகன் கைதும்  ! பதட்டத்தில் டெல்டா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அமைச்சர் மரணமும் – பெரியவர் (எ) முருகன் கைதும்  ! பதட்டத்தில் டெல்டா !

 

1948ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் பிறந்தவர் துரைக்கண்ணு. இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். 2016ஆம் ஆண்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று வேளாண்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

SIR Tamil Movie

பெரியவர் என்கிற முருகன்

அதே தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 2006, 2011 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் இந்த முறைதான் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அ.இ.அ.தி.மு.க. துவங்கப்பட்டபோது அக்கட்சியில் சேர்ந்த இவர், மாணவரணி, இளைஞரணி உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். பாபநாசம் ஒன்றியத்தின் அ.இ.அ.தி.மு.க செயலராகவும் துரைக்கண்ணு இருந்துள்ளார்.

 

இந்த நிலையில்  கொரோனா தொற்றால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 72 வயதான அமைச்சர் துரைக்கண்ணு, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார் என அவருக்கு சிகிச்சையளித்துவந்த காவிரி மருத்துவமனை தெரிவித்திருந்தது.

 

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் 63 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

அமைச்சரின் நல்லடக்கத்தில் கலந்து கொண்டு பிரமாண்டமான மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு வந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் கள்ளப்புலியூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்து வருகிற ஆளுங்கட்சியை சேர்ந்த பெரியவர் என்கின்ற முருகன் மற்றும் அவரது உறவினர்களான பிரபு, பாலகுரு, ஐயர் ஆகியோரை தமிழக தனிப்படை போலீசார் 5/11/2020 மாலை மணஞ்சேரி பகுதியில் சுற்றி வளைத்து தூக்கிச் சென்றது.

பெரியவர் என்கிற முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கும்பகோணம் புறவழிச்சாலையில் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், புறவழிச்சாலை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களுடன் கும்பகோணம் கோட்டாட்சியர் விஜயன், தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானமடையாத முருகனின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் போன்ற காரணங்களால் காவல் துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில், முருகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டதாகக் போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இன்னிலையில் போலீசார் பெரியவன் என்கிற முருகனை தூக்கியதற்கான காரணம் தெரியாததால் குழப்பத்தில் பலர் இருந்து வருகின்றனர்.

ஐயர்

பெரியவர் என்கிற முருகன் குறித்து உயர் மட்ட போலிசிடம் விசாரித்த போது ! …. பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின…

 

பெரியவர் என்கிற முருகன் ஆரம்ப முதல் பாட்டாளி மக்கள் கட்சியோடு நெருக்கமாக இருந்தாலும் காட்டுவெட்டி குருவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். இது தற்போது ஸ்டாலின் வரை தொடர்க்கிறது.

இந்த நிலையில் பெரியவர் முருகன் சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் அமைச்சர் துரைக்கண்ணுவின் கடைக்கண் பார்வையுடன் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவராக  நின்று  எதிராளி இல்லாமல் வெற்றி பெற்றார்.

 

பெரியவர் முருகன் மீது அவரது கூட்டாளிகள் மீது தஞ்சை மாவட்ட காவல் நிலையங்களில் கொலை ,கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து போன்ற பல்வேறு வழக்குகள் இருந்து வந்ததால் காவல்துறை மூலம் பெரியவன் மற்றும் கூட்டாளி மீது நடவடிக்கை எடுக்கும் போது… அமைச்சர் துரைகண்ணுவுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதால் போலிசார் நெருங்குவதற்கே பயந்தனர்.

பிரபு

தமிழகத்தின் பிரபல தாதாக்களான மணல்மேடு சங்கர், முட்டை ரவி ஆகியோர் போலீஸால் என்கவுன்ட்டர் ஆகி இறந்து போன பிறகும், தி.மு.க. திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் கொலையில் தொடங்கிப் டெல்டா பகுதியில் தொடர்ச்சியாக இடைவெளிகளில் பல கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு பின்னணியில் பக்கபலாக இருந்து அதன் மூலம் மணல் கொள்ளை, மதுபான கடைகள் டெண்டர் மற்றும் பெரிய கட்டப்பஞ்சாயத்துகளை, அடியாட்கள் சப்ளை என ஒரு கும்பகோணத்தை தனது ராஜியமாக்கி கொண்டான் பெரியவர் என்கிற முருகன் என்றனர்.

 

இதே போன்று  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை கோயம்புத்தூரில் சிறையிலிருந்து வரும்போது வாகனங்களை துப்பாக்கி சூடு நடத்தி கொன்ற வழக்கிலும் பெரியவன் மற்றும் அவரது கூட்டாளிகளும் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்டனர்.

 

 

இந்நிலையில் 05/11/2020 தனிப்படை போலீசார் பெரியவன் என்கிற முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் அவரது எதிர்தரப்பினர் சேர்ந்தவர்கள் இரண்டு பேரையும்  கைது செய்துள்ளனர். கொலை சதி திட்டம் அடிப்படையில் போலிசார் முன்னரே கண்டறிந்து கைது செய்தாகவும் அது நேரத்தில் பெரியவர் என்கிற முருகன் மற்றும் அவரது எதிர் குருப்பையும் கைது செய்திருப்பது மூலம் டெல்டாவில் நடக்க இருக்கும் பெரிய குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையாக இருக்கும் என்கிறார்கள்.

 

அதே நேரத்தில் மற்றொரு பக்கம் டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்கிய அமைச்சர்  துரைக்கண்ணு மரணத்திற்கு பின்னணியில் தேர்தல் செலவுகளுக்கு கொடுத்த பண பரிவர்த்தனை தொடர்பாக குடும்ப உறவுகளுக்குள் பிரச்சனையும், அமைச்சரின் பணங்களை கும்பகோண பெரியவர் என்கிற முருகன் முருகன் பராமரித்து வந்ததாகவும் அதனைப் பற்றிய விசாரணைக்கு அழைத்து சென்று கொண்டிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.