தொடர் கேங்ஸ்டர் கொலைகள்.. அலறும் தமிழக – பாண்டிசேரி எல்லை பகுதி !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தொடர் கேங்ஸ்டர் கொலைகள்.. அலறும் தமிழ்நாடு – பாண்டிசேரி எல்லை பகுதி !

 

இந்தியாவின் முக்கிய 7 யூனியன் பிரதேசங்களில் ஒன்று பாண்டிச்சேரி. 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டும் 30 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ளடக்கிய பாண்டிச்சேரி தனக்கெனத் தனிச்சிறப்பும் தனிச் சட்டமும் கொண்டு இயங்கி வரும் பிரஞ்ச் பார்டர் என அனைவராலும் அழைக்கப்படும் மாநிலம்.

 

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இதுபோன்ற பல சிறப்புகளைக் கொண்ட பாண்டிச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக காவல்துறையினராலே கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மர்மமான கேங்ஸ்டர் கொலைகள் நடைபெற்று வருகிறது.

 

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி இடையேயான பகுதிகளில் இது போன்ற மர்மக் கொலைகள் நிகழ்ந்து வருகின்றன.

3

கடந்த 2 மாதங்களில் பாண்டிச்சேரியில் மட்டும் பத்துக்கு மேற்பட்ட நபர்கள் கூலிப் படையினரால் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலும் கொலை செய்யப்பட்ட நபர்கள் 25லிருந்து 30 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே என்கின்றனர் போலீசார்..

 

4

மேலும் கொலை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களும் 20 வயதுக்கு உட்பட்ட நபர்களாகவே இருந்து வருகின்றன எனவே இவர்கள் மீது நடவடிக்கை காவல்துறை மேற்கொண்டாலும் மீண்டும் மீண்டும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் நடந்த கொலைகளில் விவரம் காரைக்காலில் கொலை செய்யப்பட்ட நிலையில் குப்பு கார்த்தி கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த ஐய்யங்குட்டிபாளையம் அரவிந்தன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் கிடந்தார்.

 

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த புதுக்குப்பம் கிராமத்தில் 28 வயது மதிக்கத்தக்க நபர் அடித்துக் கொல்லப்பட்டு எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

 

திப்பு ராயப்பேட்டை கொலை வழக்கில் தொடர்புடைய திபாலன் அடித்துக் கொல்லப்பட்டு மருத்துவமனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற மாநில தலைவர் மணிகண்டன் நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகே மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

 

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி முன்னாள் கவுன்சிலர் சுந்தர் கோரிமேடு பகுதியில் உள்ள ட்ரான்ஸ்போர்ட் சிட்டியில் வைத்து சிலர் சரமாரி வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதுபோன்ற பல்வேறு கொலை சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே வருவதால் காவல்துறையே கலங்கி போய் தான் இருந்து வருகிறது காரணம் போதைக்கு அடிமையான இளைஞர்கள்.. மற்ற மாநிலங்களை காட்டிலும் பாண்டிச்சேரியில் போதைக்கு தேவையான பொருட்கள் எளிமையாக கிடைப்பதால் கஞ்சா முதல் கிடைத்து வருவதால் அதற்கு அடிமையான இளைஞர்கள் இதுபோன்ற கொலை சம்பவங்களில் கூலிப்படையாக செயல்பட்டு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதுதான் கொடுமை…

 

தனக்கென தனி சிறப்பும் தனி சட்டமும் கொண்ட முக்கிய யூனியன் பிரதேசங்களான பாண்டிச்சேரியில் இதுபோன்ற கேங்ஸ்டர் கொலைகள் நடைபெறுவது காவல்துறைக்கு மட்டுமல்லாது செயல்பட்டு வரும் அரசாங்கத்திற்கே பெரும் கேடாக அமைந்து வருகிறது இதற்கு நடவடிக்கை மேற்கொண்டு குற்றச் சம்பவங்களை தடுக்க வழிவகை செய்வார்களா அரசு அதிகாரிகள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

 

-ஜித்தன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.