அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தடுமாறும் தலைமுறை… உருமாறும் உறவுகள்…

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இன்ஸ்டாகிராம் இளசுகள் !

90-ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ், ஜென்இசட் என வெறும் பத்தாண்டு கால இடைவெளி, ஒரு தலைமுறை மாற்றத்தையே ஏற்படுத்தும் அளவுக்கு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கலாச்சார மாற்றம் சமூகத்தை கவலை கொள்ள செய்திருக்கிறது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

காஸ்ட்லி பைக்கில் காதலியோடு லாங் டிரைவ் போகும் இப்போதைய தலைமுறையினரைப் பார்த்து, “நாங்கெல்லாம் இந்த வயசுல நொங்கு வண்டிதான்டா ஓட்டிக்கிட்டு இருந்தோம்”னு, 90-ஸ் கிட்ஸ் நொந்து கொள்வதைப்போல மீம்ஸ்களை நாமும் ரசித்திருப்போம்.

“எனக்கு ஆண்டிஸ்தான் பிடிக்கும். அதுதான் பிரச்சினை வராது”னு நமட்டு சிரிப்பு சிரிக்கும் புள்ளீங்கோ தொடங்கி, “பசங்க ஆண்டிஸை உசார் பன்னலாம், நாங்க அங்கிள் சோக்கா இருக்கக்கூடாதா?”னு வயசு பொண்ணுங்க ஓப்பன் டாக் பேசும் அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. கிழிந்து நைந்துபோன சட்டை, பேண்ட் அணிந்து வலம் வரும் நவநாகரீக பாலினம் கடந்த புள்ளீங்கோக்களை நாம் தினம் கடந்துதான் வருகிறோம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

வீட்டில் அடுத்தவேளை சோற்றுக்கு வழியில்லை என்ற நிலையிருந்தாலும், காஸ்ட்லி பைக் கேட்டு அடம்பிடித்து வாங்கியிருக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள். அந்த காஸ்ட்லி பைக்கின் மீது மையல் கொண்டு, போக்கிரித்தனமான அந்த பையனோடு, பைக்கில் சுற்றத் தயாராக இளம் பெண்களும் ஏங்கித் தவிக்கிறார்கள்.

உருமாறும் உறவுகள்
உருமாறும் உறவுகள்

இந்த கழிசடை சிந்தனைகள் சங்கமிக்கும் இடமாகவும்; கழிசடைகள் கலந்துரையாடும் களமாகவும் இருக்கிறது, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள். பாட்டுக்கு ரீல்ஸ் போடுகிறேன் என்ற போர்வையில் பசங்களும் பொண்ணுங்களும் செய்யும் சேட்டைகள் பெரும்பாலும், “ஏ” ரகமாகத்தான் இருந்தும் தொலைக்கிறது. ஆனால், இவையெது பற்றிய இங்கிதமே இல்லாமல்தான் சர்வசாதாரணமாக கடந்து செல்கிறது, இன்றைய தலைமுறை.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அன்றாட பேருந்து பயணங்களில், பக்கத்து சீட்டில் உரசியபடியே பயணித்து வந்தாலும் ஃபோனில் பேசுவது நமக்கு கேட்காத அளவுக்கு நாசூக்காக பேசும் ரகமும் இருக்கிறது. பக்கத்தில் யார் இருந்தால் என்ன? நாம் பேசுவதை யார் கேட்டால் என்ன? என்ற மனநிலையில், காதலியோடு, காதலனோடு, ஆண் – பெண் தோழியரோடு அந்தரங்கமாய் பேச வேண்டிய விசயங்களைக்கூட, கூச்ச நாச்சமின்றி உரையாடிவரும் ரகங்களும் இருக்கத்தான் செய்கிறது.

ஆண்களைவிட, கல்லூரி பெண்களிடத்தில் ஒரு விசயத்தை நுணுக்கமாக அவதானிக்க முடியும். ஷாப்பிங் மால், பேருந்து நிறுத்தம், பேருந்து பயணம், பொதுவெளி என எவ்விடத்திலும் அவர்கள் மொபைல் ஃபோனை கையாளும் லாவகமே மெய்சிலிர்க்க வைக்கும். அந்த அளவுக்கு அவர்களின் விரல்கள் நளினமாடும். ஒரே நேரத்தில் 5-க்கும் அதிகமான சாட் டேப்களை காண முடியும். வேறு யாருடனும் சாட் செய்கிறாயா? என்று எதிர்முனையில் சந்தேகம் கொண்டு கேட்டுவிடாத அளவுக்கு அந்த வேகம் இருக்கும்.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என பெண்களின் பருவங்களை தமிழர் மரபு பட்டியலிட்டதை கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், ஆண் – பெண் நட்புக்கிடையில் எத்தனை வகைப்பாடுகள் இருக்கிறது என்பதை உங்களால் பட்டியலிட முடியுமா? பிரண்ட், ஜஸ்ட் பிரண்ட், க்ளோஸ் பிரண்ட், பெஸ்ட் பிரண்ட், பெஸ்டி, லவ்வர், உட்பி என பட்டியல் நீள்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரையறை. ஒவ்வொரு எல்லை. கணவனுக்கு நிகரான நெருக்கத்தில் காதலன், காதலனுக்கு நிகரான நெருக்கத்தில் பெஸ்டி என இவர்களது உறவுமுறை தலைகிறுக்க வைக்கிறது.

உருமாறும் உறவுகள்இளம் தலைமுறை இதனை விரும்பி, ரசித்து கடந்து செல்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இவர்களைப் பெற்ற பெற்றோர்களின் மனநிலை என்ன? இது தொடர்பான அவர்களின் எதிர்விணை என்ன என்பதுதான் இங்கே மையமான கேள்வியாக எழுகிறது.

எந்நேரமும் ஃபோனில் மூழ்கியிருக்கிறான் – மூழ்கியிருக்கிறாள் என பொதுவில் கவலை கொள்ளும் பெற்றோர்கள், தம் பிள்ளைகள் எதில் மூழ்கியிருக்கிறார்கள் என்று என்றைக்காவது கவலை கொண்டிருக்கிறதா? அவர்களின் நடை, உடை, பாவணைகளில் அன்றாட நடவடிக்கைகளில், அவர்கள் உடுத்தும் உடைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறதா? என்பதெல்லாம் கவனமுடன் பரிசீலிக்க வேண்டிய விசயங்களாக இருக்கின்றன.

தோளுக்கு மேல் வளர்ந்த பையனை – பெண்ணை உளவு பார்க்க முடியுமா? அவர்களின் கைப்பேசிகளை ஆராய்ந்து பார்க்க முடியுமா? ரொம்ப பேசினால், ஏதாச்சும் பண்ணிப்பாங்களோனு பயமா இருக்கு … என்ற கையறு நிலையில்தான் பெற்றோர்கள் பரிதவித்து நிற்கிறார்கள்.

இந்த கழிசடை போக்கின் நீட்சியாகத்தான், ‘சுகர் மம்மி – சுகர் பேபி’ கலாச்சாரம் தமிழகத்தில் கோலோச்சுவதாக அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியிருக்கிறது. இதுபோன்ற இளசுகளை குறிவைத்துத்தான், பல்வேறு ஆப்-கள் அவர்களின் எதிர்காலத்திற்கே ஆப்பு வைக்க காத்திருக்கின்றன.

—   கலைமதி

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.