சரியா எழுதுறதவிட தெளிவா எழுதுறது முக்கியம் !

ஜாலியா படிக்கலாம் வாங்க ! பாகம் 09

மார்ச் மாதம் முழுவதும் நமக்குத் தேர்வு தான். வினாக்களை எழுதும் போது திருத்துறவங்க புரிந்து கொள்வதில் திருத்துவதற்காக நல்ல மதிப்பெண் கொடுக்கற மாதிரி எழுதுங்க. உங்க கையெழுத்து ரொம்ப முக்கியம். பாயிண்ட் புல்லட் புல்லட் போட்டு நச்சுனு நீங்க சொல்ல வர விஷயத்தை தெளிவா சொல்லுங்க. விரிவான விடைகள் இல்லை. என்ன சொல்ல போறீங்கன்றத நாலு லைன்ல எழுதுங்க. அது ஒன்னொன்னா விளக்கம் கொடுங்க நாலு லைன்க்கு நாலு லைன் ஒரு பேராகிராப் வெச்சுக்கோங்க. ஒரு பக்கத்திற்கு 21 லைனுக்கு மேல எழுதாதீங்க. ரொம்ப நெருக்கி எழுதாதீங்க. ரொம்ப குறுக்கியும் எழுதாதீங்க. நல்லா, விசாலமா எழுதுங்க.

தேர்வுக்கு முதல்நாளே மனரீதியா ஆயத்தம் ஆகிடுங்க. தேர்வு நாள் அன்று காலையில் எதுவும் படிக்காதீங்க. தேர்வு அறையில் வினாத்தாளை படித்து பார்க்க, விடைத்தாள் முகப்பு பக்கம் நிரப்புவதில் கவனம் செலுத்துங்கள். அதன் பின்பு ஒவ்வொரு கேள்விகளுக்கும் சரியாக பதில் கொடுங்க. முதலில் நன்கு விடை தெரிந்த கேள்விகளை எதிர்கொள்ளுங்கள். பிறகு என்ன, வெற்றி, உங்கள் வசம்தான்.

—   பேரா. சா.அருள்

Comments are closed, but trackbacks and pingbacks are open.