தென் மாவட்டங்களில் அதிகாிக்கும் சிறார் குற்றச்செயல்கள் ! – எவிடன்ஸ் கதிர் பேட்டி…
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்தில் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து மதுரையில் உள்ள எவிடென்ஸ் அமைப்பின் சார்பில் உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் அவ்வமைப்பின் செயல் இயக்குனர் கதிர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் நாங்குநேரி கொலையில் குறிப்பிட்ட சமூகத்தை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக கொலை செய்துள்ளனர். வெட்டும் போது சாதீயை சொல்லி வெட்டி உள்ளனர் நாங்குநேரி சுற்று வட்டார பகுதிகளில் இரு சமூகத்தினர் மாறி, மாறி வெட்டி கொள்கிறார்கள் காவல்துறையின் உளவுத்துறை செயல்படவில்லை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுபோய் உள்ளது. கொத்து, கொத்தாக மக்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெறும் கொலைகள் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. சராசரியாக 40 முதல் 50 வரை நடைபெறும். கொலைகள் தற்போது 90 அளவிற்கு உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பெரும் 10 பகுதியில் காவல்துறை கண்காணிக்க தவறி விட்டது. நாங்குநேரி கொலை வழக்கில் வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை சாதீமீது கைவைக்க திமுக அரசு பயப்படுகிறது அவர்களின் ஓட்டு வராது என திமுக அரசு நினைக்கிறது. சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
1990 முதல் 74 விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், 2 ஆணைய பரிந்துரைகள் தவிர மற்ற ஆணையத்தின் பரிந்துரைகள் மக்களுக்கு எதிராக வந்துள்ளது. 1995 முதல் 2000 வரை தென் மாவட்டங்களில் நடைபெற்ற மோதல்களில் 450பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட சமூகம் தென் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இளம் சிறார்கள் கொலை சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இளம் சிறார்கள் கொலை வழக்கில் தண்டனை குறைத்து வழங்கப்படும் என்பதற்காக கொலைச் சம்பவங்களில் சிறார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள் என கூறினார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.