திருச்சியில் சிறுவர்களை குறிவைக்கும் மர்ம கும்பல் பெற்றோர்களே உஷார்…
திருச்சியில் சிறுவர்களை குறிவைக்கும் மர்ம கும்பல் பெற்றோர்களே உஷார்…
திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் இவரது மகன் அர்ஜுன் கார்த்திக் (வயது-12) இவர் நேற்று 12/11/2020 மதியம் 1.30 மணி அளவில் அன்பு நகர் பகுதியில் உள்ள அன்பு கணபதி கோயில் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்ற சிறுவனிடம் இருசக்கர வாகனத்தில் அந்த இரண்டு நபர்கள் கத்தியைக் காட்டி சிறுவனை மறைத்து அவனது கையிலுள்ள 400 ரூபாய் பணத்தை அபேஸ் செய்து சென்றுள்ளது..
இதேபோன்று கடந்த மாதம் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையம் யமஹா ஷோரூம் அருகே இரவு 10 மணி அளவில் கடையினை பூட்டிவிட்டு தனது உறவினர் முன்னே செல்ல பின்னே தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பதினேழு வயது மதிக்கதக்க சிறுவனிடம் வி.என் நகரில் இருந்து ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று சிறுவனை திட்டி அவனது கவனத்தை திசை திருப்பி வாகனத்தை நிறுத்துமாறு வற்புறுத்தி உள்ளது.
சிறுவன் வாகனத்தை நிறுத்தவே அந்த வழிப்பறி கும்பலை சேர்ந்த இரண்டு பேரில் ஒருவர் மட்டும் சிறுவனின் வாகனத்தில் ஏறிக் கொண்டு பட்டாக் கத்தியை வைத்து வயிற்றைக் கிழித்து விடுவதாகவும் நான் சொல்லும் இடத்திற்கு செல்லுமாறும் மிரட்டியுள்ளது இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிய சிறுவன் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளான். சரியாக கரூர் பைபாஸ் சாலை சென்றவுடன் ஒரு இருட்டில் வண்டியை நிறுத்தி சிறுவனை கத்தியால் தாக்கியுள்ளனர். பின்னர் வாகனத்தை கேட்டு மிரட்டவே வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு சிறுவன் ஓடியுள்ளார் சிறிது தூரம் பின்தொடர்ந்த அந்த வழிப்பறி கும்பல் சிறுவன் யாரையாவது கூப்பிட்டு விடுவான் என்ற பயத்தில் வாகனத்தை விட்டுட்டு ஓடியது இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவன் கோட்டை காவல்நிலையத்தில் பிரிவில் புகார் அளித்துள்ளார். மேலும் போலீசார் இது தொடர்பாக சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது முகத்தில் எந்தவித மறைத்தலும் இல்லாமல் அந்த இரண்டு பேர் சிறுவனை கத்தியை காட்டி மிரட்டியது தெரியவந்தது.
திருச்சி மாநகரில் முக்கிய பகுதியான ஸ்ரீரங்கம், தில்லைநகர், கேகே நகர், சத்திரம் பேருந்து நிலையம், பகுதிகளில் கடந்த சில நாட்களாக தீவிரமாக வழிப்பறி கும்பலின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது இந்நிலையில் போலீசார் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்தாலும் அவர்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துக் கொண்டே வருகிறது..
இந்நிலையில் இக் கும்பலின் அடுத்தகட்ட நகர்வாக சிறுவர்களிடம் வழிப்பறி செய்வது என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது பெற்றோர்களே தங்களது குழந்தைகளை தனியாக வெளியில் விளையாடுவதற்கு கூட அனுப்ப தயங்கி வருகின்றனர் இதுகுறித்து மாநகர காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
-ஜித்தன்