அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

யார் வந்தாலும் சீட் ! உட்கட்சி நிர்வாகிகள் குமுறல் !

திருச்சியில் அடகு நகையை விற்க

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தியுள்ளார். வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

இதையடுத்து, மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கடந்த 25ம் தேதி, 2 ஆயிரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை விஜய் இன்று வெளியிடுகிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில், இன்று வெளியிடும் வேட்பாளர் பட்டியலில் இருக்கும் வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்துவார் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறினர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அமமுக இதற்கிடையே, அதிமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், விஜய் முன்னிலையில் தவெகவில் நேற்று சேர்ந்தனர். இதில் 10 பேர் தவெக வேட்பாளர்களாக மாறியுள்ளனர். காங்கிரசில் இருந்து விலகிய செல்வம், உதயநிதியை எதிர்த்து திருவல்லிக்கேணியில் போட்டியிடுவார்.

அமமுகவுக்கு தொகுதி ஒதுக்கியதால் அதிமுகவில் இருந்து விலகிய நாங்குனெரி  முன்னாள் எம்எல்ஏ நாராயணன், அதே தொகுதியில் போட்டியிடுவார்.  பல்லாவரம்  முன்னாள் எம்எல்ஏ தன்சிங், பல்லாவரம் தொகுதியில்  போட்டியிடுவார்.  . ஆலங்குளத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.ஜி. ராஜேந்திரன் போட்டியிடுகிறார் என்று நிர்வாகிகள் கூறுகின்றனர். இவர்கள் மட்டுமின்றி, மாற்றுக்கட்சிகளில் இருந்து யார் வந்தாலும், அவர்கள் போட்டியிட விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு சீட் வழங்க, நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.